ஜம்முனு வாழ காம்கேரின் OTP-192: முற்றுப்புள்ளியும், மூன்று புள்ளிகளும்!

பதிவு எண்: 923 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 192
ஜூலை 11, 2021

முற்றுப்புள்ளியும், மூன்று புள்ளிகளும்!

எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை.

வாழ்க்கையில்…

எந்தெந்த விஷயங்களுக்கு கேள்விக்குறி ? போடவேண்டும்

எந்தெந்த விஷயங்களுக்கு ஆச்சர்யக்குறி ! போடவேண்டும்

எந்தெந்த விஷயங்களுக்கு கமா , போட வேண்டும்

எந்தெந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி . வைக்க வேண்டும்

என்பதை எல்லாம்விட மிக முக்கியமான ஒன்றுள்ளது

அது

எந்தெந்த விஷயங்களை மூன்று புள்ளிகள்… வைத்து தொடர வேண்டும் என்பதே.

நாம் மறக்க வேண்டியவறை முற்றுப் புள்ளியாக மறந்து, நமக்குத் தெரியாததை கேள்வியாகக் கேட்டுத் தெரிந்து, சரியானதொரு விடை கிடைத்ததும் ஆச்சர்யத்துடன் வியந்து நம் நற்பண்புகளை தொடர்வதுதான் வாழ்க்கையின் தத்துவம்.

சின்ன சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’  என்பதையெல்லாம் வலுகட்டாயமாக நம் வாழ்க்கையில் பொருத்திக்கொண்டு உறவுகளையும்  நல்லெண்ணம் கொண்ட நட்புகளையும் முறித்துக்கொண்டு வாழாமல், கொஞ்சம் மனமிறங்கி மன்னித்து மறந்து தேவையான இடங்களில் மூன்று புள்ளிகள் போட்டு உறவுமுறையை தொடரலாம். தவறில்லை.

வாழ்க்கை மிகச் சிறியது. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாமே முடிந்துவிடும். அதற்குள் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைக்கலாமே.

ஆங்கிலத்தில் அழகான பொன்மொழி ஒன்றுண்டு.

Apologizing does not always mean that you’re wrong and the other person is right. It just means that you value your relationship more than your ego.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon