விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…

 

பொதுவாக என்னிடம் வேலை வேண்டிதான் மெசேஜ் அனுப்புவார்கள். இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி வித்தியாசமாக இருந்தது.

‘ஐ.டியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களை படித்துத்தான் IT யில் சேர்ந்தேன்…’ என்ற கருத்துடன் தொடங்கி,

‘உங்கள் நிறுவன விழாவுக்கு சொல்லி அனுப்புங்கள்… அந்த விழாவில் நான் உங்களை வாழ்த்திப் பேச ஆசைப்படுகிறேன்’ என்ற கருத்துடன் முடித்திருந்த…

அந்த செய்தியை தாங்கி வந்த வாட்ஸ் அப் தகவலால் என் ரெஸ்பான்சிபிலிடி கூடியுள்ளது. கடவுள் இதுபோன்ற நல்ல விஷயங்களுக்கு என்னை கருவியாக்கி இருக்கிறார் என நினைக்கும்போதே இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி கூடியுள்ளது.

கவிஞரும், ஐ.டி துறை சாஃப்ட்வேர் இன்ஜினியருமான திரு. கோ. அரங்கராசு அவர்களே, உங்கள் விருப்பப்படி உங்கள் துறையில் நீங்கள் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி

பிப்ரவரி 26, 2018

 

(Visited 27 times, 1 visits today)