#Ai: Restricted Area Vs Open Kitchen

Restricted Area Vs Open Kitchen

நீங்கள் 1992 களில் இருந்தே ஏஐ குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றை உங்கள் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளில் பயன்படுத்தியதாகவும் சொல்கிறீர்கள். இப்போது எப்படி ஏஐ மக்களிடம் இத்தனை வேகமாக பரவியது என சொல்ல முடியுமா?

எல்லோருக்கும் புரியும்படி ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்.

ஒரு ஹோட்டலுக்கு செல்கிறோம். சமையல் அறை பகுதியின் மேல் ‘Restricted Area’ என்றோ அல்லது ‘Staff Only’ என்றோ எழுதி இருப்பார்கள். சமையல் அறையில் அவர்கள் என்ன சமைக்கிறார்களோ, அவற்றை சப்ளையர்கள் ஹோட்டலில் சாப்பிட வருபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பரிமாறுவார்கள். அங்கு சாப்பிட வருபவர்கள் சமையல் அறைக்குள் செல்ல முடியாது.

இப்படித்தான் உலகம் எங்கும் எங்கள் காம்கேர் நிறுவனத்தைப் போன்று பல்வேறு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்கள் ஏஐ குறித்து பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிகள் செய்து வந்தனர். அவற்றைத் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தி வந்தோம். அங்கு என்ன நடக்கிறது என்றோ, அவை ஏஐ தான் என்றோ யாருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது. ஆனால் அவை ஏஐதான்.

இப்படி நான் சொல்வதால் நானோ அல்லது எங்கள் காம்கேர் நிறுவனம் மட்டும்தான் அறிவு ஜீவிகள் என சொல்லவரவில்லை. இதுநாள் வரை மக்கள் தொழில்நுட்பத்தின் பயனாளர்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு என்ன கொடுக்கப்படுகிறதோ அவற்றை பயப்படுத்தி வந்தார்கள்.

இன்று அந்த நிலை இல்லை. இதுநாள் வரை தொழில்நுட்பத்தின் பயனாளர்களாக இருந்து வந்த மக்களும் கிரியேட்டர்களாக மாறிவருகிறார்கள்.

திறந்துவிடப்பட்ட ஏரியில் இருந்து தண்ணீர் கட்டுக்கடங்காத வேகத்துடன் வெளியேறுவதைப் போல் ஏஐ மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களிடம் வேகமாக சென்று ஒட்டிக் கொண்டு விட்டது.

எப்படி?

ஹோட்டல்களில் உள்ள ‘Restricted Area’ ஆக இருந்த சமையல் அறை, ’Open System’ ஆக திறந்தவெளி சமையல் அறையாக மாறி உள்ளது.

அதனால் மக்களும் அங்கு சென்று அங்கு தயாராகும் உணவு பண்டங்களில் தங்களுக்கு தேவையானதை மிக்ஸ் செய்து புதுவிதமான உணவுபண்டத்தை தயார் செய்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.

இதை பஃவே சிஸ்டத்துடன் ஒப்பிட வேண்டாம். பஃவே சிஸ்டத்திலும் அவர்கள் என்ன சமைத்து வைக்கிறார்களோ அவற்றில் இருந்து தங்களுக்கு விருப்பமானதை எடுத்து சாப்பிட முடியும். நான் சொல்வது ‘Open System Kitchen’. சமையல் அறைக்கே சென்று சமைப்பவர்கள் தயாரிக்கும் டிஷ்களில் தங்களுக்குத் தேவையானதை மிக்ஸ் செய்து புதுவித டிஷ்ஷை தயாரித்து சாப்பிடும் முறை. இந்த ‘Open System Kitchen’ கான்செப்ட் எங்கும் வரவில்லை (நான் அறிந்த வரை).

ஏஐ -ன் ஆரம்ப காலத்துக்கும், ஏஐ-ன் இன்றைய காலத்துக்குமான ஒப்பீட்டிற்காக நானாக அறிமுகப்படுத்தியது ‘Open System Kitchen’.

இதுபோல, ஏஐ-ன் பல்வேறு அம்சங்கள் இன்று பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து நம் மக்கள் தங்களுக்கு எது தேவையோ அவற்றைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற சூழல் வந்துள்ளதால் ஏஐ மக்களிடம் நெருக்கமாகி உள்ளது.

இந்த விளக்கம் எப்படி இருக்கிறது? எளிமையாக இருக்கிறதா?

இப்படித்தான், இல்லை இல்லை. இதைவிட மிக எளிமையாக இருக்கும் நான் எடுக்கும் வகுப்புகளும், கருத்தரங்குகளும்.

எங்கள் நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகளில் எனக்குக் கிடைத்துவரும் அனுபவங்களை இப்படியாக எழுத்து, பேச்சு என புத்தகங்கள் மற்றும் ஆடியோ வீடியோவாக வெளிப்படுத்தி வருகிறேன் என்பது உங்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்த செய்திதான்.

ஏஐ குறித்து நான் நடத்திவரும் ஒர்க்‌ஷாப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் வாட்ஸ் அப்: 9444949921.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 23, 2025 | வியாழன்  

(Visited 18,983 times, 8 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon