பெண் சாதனையாளர் விருது – Rotary Club of Anna Nagar Aadithya (May 11, 2019)

Women Achiever Award  – by Rotary Club of Anna Nagar Aadithya

மே 11, 2019 அண்ணா நகர் ரோட்டரி கிளப் ஆதித்யாவின் நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஹோட்டல் சவேராவில் நடைபெற்றது.  அதில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு  Woman Achiever Award  விருதளித்து கெளரவப்படுத்தினார்கள்.

என்னுடன் இணைந்து விருது பெற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில் எனக்கு Woman Achiever Award, விளையாட்டுத் துறையில் சாதித்த சுஜாநிதா அவர்களுக்கு  Young Achiever Award, மிருதங்க வித்வான் திருச்சி ஆர். சுதர்சனன் அவர்களுக்கு Vocational Excellence Award கொடுத்து கெளரவித்தார்கள்.

நேற்று தேசிய தொழில்நுட்ப தினம். இந்த தினத்தில் தொழில்நுட்பத்துறையில் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆப்ஸ், ஆவணப்படங்கள், புத்தகங்கள் என 25 வருடங்களுக்கும் மேலான என் பங்களிப்பை கெளரவித்து விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.

 

கிரிஜா ராகவன் அவர்களுடன் கலந்துரையாடல்

நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன் கிரிஜா ராகவன் அவர்களின் சந்திப்பு.

இவர் எனக்கு நீண்ட காலமாக மிகவும் நெருக்கமானவர். என்னைப் பற்றி நன்கு உணர்ந்தவர். இந்த விருதுக்குக்கும் என்னைப் பரிந்துரை செய்வதவரும் இவர்தான்.

கிடைத்த சில நிமிட இடைவெளியில் ஆழமான விஷயங்களை சுருக்கமாகப் பேசினோம். தனிமனித ஒழுக்கம் குறைந்து வரும் இன்றைய சமூக சூழலைப் பற்றிப் பேசும்போது…

‘மாபெரும் சபையினில் நீ நடந்தால்  உனக்கு மாலைகள் விழவேண்டும்…’

இப்படி ஆசைப்படுவது தவறில்லை. அந்த நிலைக்கு வரும்போது மற்றவர்கள் நம்மை விட்டு இரண்டடி தள்ளி நின்று நம்மை வணங்கக் கூடிய நிலையில் நாம் இருக்க வேண்டும் என்ற கருத்தை மிக அழகாகக் கூறினார் கிரிஜா ராகவன்.

உடனே என் நினைவில் வந்தது இதுதான்…

‘Don’t make your character like a garden where everyone can walk, make your character like a sky where everyone desires to reach…’

கலைமாமணி அபிராமி ராமநாதன் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்

முதன்மை சிறப்பு விருந்தினர் கலைமாமணி அபிராமி ராமனாதன் அவர்கள், ‘ஆண் வீரமானவன். பெண் விவேகமானவள். நெருப்பு சுடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆண் இதை உணர அதற்குள் கைவைத்துப் பார்ப்பான். இந்த குணம் வீரம். பெண் ‘நெருப்பு சுடும் கை வைக்காதே என எடுத்துச் சொல்வாள்’. இது விவேகம். வீரமும், விவேகமும் இணைந்ததுதான் வாழ்க்கை.’ என மிக சிறப்பாக உரையாற்றினார்.

என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘கணினியில் தொழில்நுட்ப வல்லுநராக இருப்பதுடன் அது குறித்த புத்தகங்கள் எழுதி சாதனை செய்திருப்பதுதான் பெரிய விஷயம். Hats Off to you’ என பரந்த மனப்பான்மையுடன் பாராட்டினார்.

சந்திர மோகன் அவர்களின் ஊக்கம்

சிறப்பு விருந்தினர் சந்திரமோகன் அவர்கள் என் தொழில்நுட்பச் சாதனைகள் குறித்துப் பாராட்டிப் பேசியதோடு நாங்கள் நடத்தி வரும் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளைப் பணிகள் குறித்தும் பேசி அதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்வதாகச் சொல்லி ஊக்கமளித்தார்.

இளங்கோ அவர்களின் பாராட்டு

ரோட்டரி கிளப்பின் பிரசிடெண்ட் திரு. இளங்கோ பேசும்போது ‘சென்னை மெரினா ஆர்பரிக்கும் ஆண் கடல், ராமேஸ்வரம் கடல் அமைதியான பெண் கடல். அதுபோல காம்கேர் புவனேஸ்வரி அமைதியாக இருந்து கணினியில் வியத்தகு சாதனைகள் செய்துள்ளார்…’ என பாராட்டினார்.

டாக்டர் சங்கரன் அவர்களின் ஒருங்கிணைப்பு நேர்த்தி

ஒரு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டுமானால் அதனை தொடக்கத்தில் இருந்து முடிவுவரை தொய்வில்லாமல் ஒருங்கிணைக்கும் இடத்தில் இருப்பவரின் பங்குதான் அதி முக்கியம். இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சங்கரன்.

இன்விடேஷன் தயாரிப்பதில் காட்டிய அக்கறை ஆகட்டும், நிகழ்ச்சி தினமன்று நினைவூட்டும் செய்தி அனுப்பிய ஈடுபாடாகட்டும், நிகழ்ச்சியில் வரவேற்ற பண்பாகட்டும், நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்தபின்னர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியுடன் கூடிய நன்றியாகட்டும்… அத்தனையிலும் டாக்டர் சங்கரன் அவர்களின் நேர்த்தி வியக்க வைக்கிறது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று பண்புடன் பாராட்டி அனைவரையும் நெகிழ வைத்த அண்ணா நகர் ரோட்டரி கிளப் ஆதித்யா குழுவுக்கு என் மனமார்ந்த அன்பும், நன்றியும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 11,  2019

(Visited 365 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon