ஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும், ஆப்களும்…
2016 – 2018 வரை தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக வெளிவரும் காண்டீபம் என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருந்தேன்.
2013-2014 வரை கல்கி குழுமத்தின் ஒரு அங்கமாக வெளிவரும் மங்கையர் மலர் பத்திரிகையில் ஸ்மார்ட் லேடி தொடர் எழுதி வந்ததோடு அதற்காகவே ஒரு பிளாகை உருவாக்கி வடிவமைத்து அதில் வாசகிகளின் பங்களிப்பை பப்ளிஷ் செய்து வந்ததோடு, ஃபேஸ்புக் மூலம் வாசகிகளின் தொழில்நுட்ப சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வாரத்தில் 2 நாட்கள் ஃபேஸ்புக் சாட் செய்து மங்ககையர் மலர் வாசகிகள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். https://mmsmartlady.blogspot.com/
ஜனவரி 2013 – ஜனவரி 2014 வரை விவேகானந்தரின் 150-வது வெயந்தியை ஒட்டி நடத்தப்பட்டு வந்த vivekanandam150.com என்ற வெப்சைட்டில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளை தொடர்ச்சியாக ஒருவருடம் எழுதிவந்ததோடு அந்த வெப்சைட்டின் தொழில்நுட்ப ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தேன். http://www.vivekanandam150.com
ஏப்ரல் 2018 – டிசம்பர் 2018 வரை சிருஷ்டி குழுமத்தில் இருந்து வெளிவரும் அமிழ்தம் மின்னிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருந்தேன். http://amizhthamemagazine.blogspot.com