பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்!

தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக  நான் எழுதிய 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள்  பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த  நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன.

1992-ம் வருடத்தில் இருந்து நான் எழுதி வரும் தொழில்நுட்பப் புத்தகங்களில் பல சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்ந்த  பல கல்லூரிகளில் இளங்கலை முதுகலை பாடதிட்டங்களாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டங்களாகவும் இடம் பெற்றுள்ளன.

மேலும், எங்கள் காம்கேர் நிறுவனம் தயாரித்துள்ள  சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இகன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள்  பல்கலைக்கழக  நிர்வாக செயல்பாடுகளுக்காகவும்,  ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

காம்கேர் பதிப்பக நூல்கள் – சென்னைப் பல்கலைக்கழகத்தில்!  

‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – For Beginners’
‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – இன்டர்நெட் எல்லோருக்கும்’
‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – தமிழும் இணையமும்’

காம்கேர் பதிப்பக நூல்கள் –  மைசூர் பல்கலைக்கழகத்தில்!

Guide Animation – Simple & Classic
Masking Effect – Image & Text
Animation – Shapes & Symbols
Action Script – Image & Text
Shape Tweening Animation – Simple & Classic
Action Script – Audio & Video
Animation – Audio & Video
Button Symbols – Simple & Classic
Frame by Frame Animation – Simple & Classic
Motion Tweening Animation – Simple & Classic

விகடன் பதிப்பக நூல் – நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியில்!

இன்டர்நெட் A-Z!

சூரியன் பதிப்பக நூல் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்!

கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்!

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நூல் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்!

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழக வெளியீடு – சுயமகளிர் உதவிக்குழுக்களுக்காக!

அண்ணா பல்கலைக்கழகம் நான் எழுதிய டெஸ்க்டாப் பப்ளிஷிங்-1,  டெஸ்க்டாப் பப்ளிஷிங்-2, நிர்வாகத்திறன் மேம்பாடுகள் என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளது. தமிழகமெங்கும் உள்ள சுயமகளிர் உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த சிறுதொழில்  தொடங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த முயற்சியில் என்னையும் பங்கெடுக்கச் செய்தார்கள்.

டெஸ்க்டாப் பப்ளிஷிங்-1
டெஸ்க்டாப் பப்ளிஷிங்-2
நிர்வாகத்திறன் மேம்பாடுகள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வெளியீடு – கணினித் தமிழ் டிப்ளமோ பிரிவுக்காக!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் கணினித்தமிழ் பட்டயப் படிப்பைத் தொடங்கியபோது அதற்காக கணினிப் பயன்பாடு என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டார்கள்.

கணினிப் பயன்பாடு

ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள்

நான் எழுதிய புத்தகங்களும் எங்கள் நிறுவன சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகளும் பாடதிட்டமாக இருப்பதுடன் நான் எழுதியுள்ள தொழில்நுட்பப் புத்தகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து Ph.D பட்டம் பெற்றவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

குறிப்பாக சைபர் க்ரைம் குறித்து நான் எழுதி விகடன் வாயிலாக வெளியான  ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற புத்தகம்  சைபர் குற்றங்களும் தீர்வுகளும் என்ற ஆராய்ச்சிக்கும், நான் எழுதி மணிவாசகர் பதிப்பகம் வாயிலாக வெளியான  டிஜிட்டல் நூலகம் என்ற புத்தகம் நூலகத்துறை சார்ந்த ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாடத்திட்டமான ஆடியோ வீடியோ தயாரிப்புகள்

மைசூர் பல்கலைக்கழத்தில் குழந்தைகளுக்காக எங்கள் காம்கேர் நிறுவனம் தயாரித்த தாத்தா பாட்டி கதைகள், தினம் ஒரு பழம் உட்பட சில அனிமேஷன்  கதைகளும், பாடல்களும்  கன்னடம் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாடதிட்டமாக வைக்கப்பட தகுதிபெற்றன.

மைசூர் பல்கலைக்கழகத்தில் எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக வெளியிட்ட அனிமேஷன் கற்றுக்கொள்ள உதவும் படைப்புகள் சிடிக்களாகவும், இ-கன்டென்ட்  படைப்புகளாகவும் 20 தலைப்புகளில் பாடதிட்டமாக வைக்கப்பட்டன.

யு.ஜி.சி சேனலில் மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியான கல்வி தொடர்பான  பல நிகழ்ச்சிகளில்  நானே நேரடியாக பங்கேற்றதோடு  எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாகவே வீடியோ நிகழ்ச்சிகளை தயாரித்துக்கொடுத்திருகிறோம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து ஒலிபரப்பான பாண்டிச்சேரி FM -க்காக  ‘தினம் ஒரு குறள்’ என்ற நிகழ்ச்சியை எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் தயாரித்துக்கொடுத்தோம்.  திருக்குறளை அப்படியே படித்தல், திருக்குறளை கர்நாடக இசையில் பாடுதல், திருக்குறளுக்கான எளிமையான விளக்கம், விரிவான விளக்கம், அன்றாட நடமுறை நிகழ்வுகளுடன் கதைபோல சொல்லுதல் என மிகவும் சுவாரஸ்யமாக தயாரித்திருந்தோம். 1330 திருக்குறள்களும் தினம் ஒரு குறளாக ஒலிபரப்பானது.

அதுபோல தினம் ஒரு பழம், தினம் ஒரு காய், தினம் ஒரு தாவரம், தினம் ஒரு கதை என்ற தலைப்புகளிலும் நிகழ்ச்சிகளை தயாரித்துக்கொடுத்தோம்.








(Visited 242 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon