அறம் வளர்ப்போம் 6-12

அறம் வளர்ப்போம்-6
ஜனவரி 6, 2020

அன்பு – அறத்தை வளர்க்கும், மகிழ்ச்சியை கொடுக்கும், சூழலை வளப்படுத்தும்.

எதுவெல்லாம் நல்லதோ அதுவே அறம். அந்தவகையில் அன்பும் ஓர் அறமே.

அன்பு செலுத்துபவரையும், அதைப் பெற்றுக்கொள்பவரையும் ஒரே நேரத்தில்  மகிழ்விக்கவல்லது.

அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் நல்லவிதமாகவே நடைபெறும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-7
ஜனவரி 7, 2020

பண்பு – அன்பை பெருக்கும், பகட்டை நீக்கும், ஒழுக்கத்தை வளர்க்கும்.

பண்பு மனிதர்களிடம் மட்டுமில்லாமல் சகல உயிர்களிடத்திலும் அன்பைக் காட்டத் தூண்டும்.

போலியான ஆடம்பரத்தை தூக்கி எறியும் ஆற்றலைக்கொடுக்கும்.

ஒழுக்கமாக வாழும் குணத்தை கற்றுக்கொடுக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-8
ஜனவரி 8, 2020

பாசம் – உணர்வுப்பூர்வமானது, பந்தத்தை வளர்க்கவல்லது, கனிவை கொடுக்கவல்லது.

குடும்பத்தினரிடமும் உறவினர்களிடம் காண்பிக்கப்படும் உணர்வுக்கு பாசம் என்று பெயர். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது.

பாசம் உறவுகளிடம் பந்தததை வளர்க்கும் சக்தி வாய்ந்தது. பந்த பாசம் என்று சேர்த்துத்தான் சொல்லுவது வழக்கம்.

பாசம் கனிவான சூழலை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-9
ஜனவரி 9, 2020

ஒழுக்கம் – அறத்தின் அடிப்படை, ஒழுங்கு முறை, நல்ல பண்புகள்

அறத்தின் அடிப்படையே ஒழுக்கம்தான். எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம். ஆகவே, ஒழுக்கத்துடன் செய்யப்படும் எந்த ஒரு செயலும் அறமே.

ஒழுக்கம் என்பது ஓர் ஒழுங்கு முறை. எந்த ஒரு செயலையும் சரியாக செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதியாகவும் கொள்ளலாம்.

ஒழுக்கமாக வாழ்பவர்களிடம் நல்ல குணநலன்களும் பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-10
ஜனவரி 10, 2020

மகிழ்ச்சி – குதூகலம், சந்தோஷம், மனநிறைவு

மகிழ்ச்சி என்பது ஒருவிதமான குதூகலமான மனோநிலை.

மகிழ்ச்சி என்பது நாம் மட்டும் சந்தோஷமாக இருப்பது என்று பொருள் அல்ல. பிறரை மகிழ்வித்து வாழ்வதுதான் உண்மையிலேயே இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

நாம் செய்கின்ற செயல்களை ஈடுபாட்டுடன் செய்யும்போது நமக்குள் ஏற்படும் மனநிறைவுக்கும் மகிழ்ச்சி என்றே அர்த்தம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-11
ஜனவரி 11, 2020

கல்வி – அறிவை கொடுக்கும், பண்பை வளர்க்கும்,  அன்பை கூட்டும்

கல்வி கற்பதினால் அறிவு வளரும். ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றம் பெருகும்.

கல்வி கற்க கற்க பண்பு வளரும். கல்வி ஒழுக்கத்துடன் வாழ வேண்டிய பண்பை கற்றுக்கொடுக்கும்.

நாம் கற்கின்ற கல்வி நமக்குள் அன்பைப் பெருக்கி அன்பைக் கொடுக்கும் ஆற்றலை பெற்று தரும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-12
ஜனவரி 12, 2020

அடக்கம் – அமைதியைக் கொடுக்கும், ஆற்றலைப் பெருக்கும், மதிப்பை உண்டாக்கும்.

அடக்கமாக இருப்பவர்களின் மனதில் இயல்பாகவே ஓர் அமைதித்தன்மை குடிகொண்டிருக்கும்.

அமைதி நமக்குள் இருக்கும் ஆற்றலை தக்க நேரத்தில் வெளிப்படுத்தத் தூண்டுவதுடன், நம்முடைய செயல்திறனையும் அதிகரிக்கும்.

அமைதியாக இருப்பவர்கள் மீதான மதிப்பு கூடுவதுடன், தானாகவே பிறரை மரியாதைக் கொடுக்க வைக்கும் சக்திவாய்ந்தது அமைதி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 323 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon