ஃபேஸ்புக்கில் நட்புத் தொடர்பில் இருந்தும் சிலரின் பதிவுகள் உங்கள் கண்களில் படுவதில்லையா?
தொழில்நுட்பம் சார்ந்து ஒரு விஷயம்.
ஃபேஸ்புக்கில் நீங்கள் யாருடைய பேஜில் வரும் பதிவுகளை அடிக்கடி படிக்கிறீர்களோ, அவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்படும். அதிலும் குறிப்பாக அவ்வப்பொழுது லைக்கோ அல்லது கமெண்ட்டோ செய்தால் தவறாமல் அவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்படும்.
உங்கள் நட்புத்தொடர்பில் இருக்கும் சிலரின் பதிவுகளை படிக்காமல் ஸ்க்ரோல் செய்து கடப்பீர்கள் என்றால் அவை நாளடைவில் உங்கள் பேஜில் வராமல் போகலாம்.
ஆனால் அவர்கள் டைம்லைனில் சென்று படிக்கலாம். அப்போது அவர்களின் ஒரு சில பதிவுகளுக்கு ஒரு லைக் (Respond) செய்துவிட்டு வந்தால் பிறகு அவர்கள் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்பட ஆரம்பிக்கும்.
ஆனால் நீங்கள் படிக்காமல் தவிர்க்கும் பதிவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வராது, நீங்களும் அவர்களும் நட்புப் பட்டியலில் இருந்தாலும்.
இதுதான் ஃபேஸ்புக் அல்காரிதம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 5, 2021