பலனை அனுபவிக்கக் கடமையைச் செய்!
கடமையை செய்
பலனை எதிர்பார்க்காதே
இது பகவத் கீதை!
இதன் பொருள்
தெரியாதவர் யாருமுண்டோ?
ஆனால் நானோ
கடமையையும் பலனையும்
வேறுவிதமாக அணுகுகிறேன்…
நித்தம்
புதுப்புது
கடமைகள்
நமக்காக
காத்துக்கொண்டிருப்பதே
நாம் பிறப்பெடுத்திருப்பதன்
பலன்தானே!
ஆக, கடமையை செய்துவிட்டு
பலனை எதிர்பார்க்காமல்…
கிடைத்திருக்கும் பலனுக்காகவே
கடமையை
செய்துகொண்டிருக்கிறோம்…
என்ற புது சிந்தனையுடன்
டிசம்பர் 9, 2021 பிறந்த நாள்
கடந்து சென்றது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 10, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 61 times, 1 visits today)








