#Mothersday
அனைத்துத் தாய்களுக்கும், தாயுமானவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்!
என் தாய்:
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ப்ராஜெக்ட்டின் போது ஒரு கிளையிண்ட் நிறுவனத்துடன் ஒரு சிறு பிரச்சனை. அதற்கு நல்ல முறையில் தீர்வு உண்டாக்க நான் முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அந்த நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஹெட் ‘முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் ஆபத்து’ என அபத்தமான ‘அரதபழசான’ உதாரணங்களைக் காட்டி என்னை அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலக ஆலோசனைகளை அள்ளி வீசினார்.
என் நிர்வாகத்தின் தினப்படி நடவடிக்கைகளை என் பெற்றோர் நன்கறிவர். அந்தப் பிரச்சனைக் குறித்து என் அம்மாவிடம் சொன்னபோது என் அம்மா என்ன சொன்னார் தெரியுமா?
‘நாம் ஏன் சேலையாகவே இருக்கணும், முள்ளாக இருக்கலாமே!’
அம்மாவின் இந்த தைரியம்தான் என் ஜீனுக்குள்ளும்!
குறிப்பு: அந்தப் பிரச்சனையின் தீர்வு சுபம்!
என் தாயுமானவர்: அப்பா!
பிரச்சனைகளுக்கு என் அப்பா சொல்லும் மந்திரம் என்ன தெரியுமா?
‘எவ்வளவு சீக்கிரம் அந்த பிரச்சனையை தூக்கி எறிய முடியுமோ அத்தனை விரைவில் தூக்கி எறிந்துவிட்டு அடுத்த வேலையை பார்… உன் மனதுக்குப் பிடிக்காத, இஷ்டமில்லாத எந்த வேலையும் அது எத்தனை பெரிய லாபத்தைக் கொடுத்தாலும் அதை செய்ய வேண்டாம்… அது உன் உடல்நலனை சீரழித்துவிடும்!’
அப்பாவின் இந்த ஊக்கம்தான் என் ஜீனுக்குள்ளும்!
குறிப்பு: இன்றுவரை அப்படியேத்தான் இருக்கிறேன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 8, 2022