காம்கேர் தொடக்கம்!

காம்கேர் தொடக்கம்!

அக்டோபர் 15, 2021

1992 – ல் இதுபோன்ற ஒரு விஜயதசமி நன்னாளில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று 30-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.

29 ஆண்டுகள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. ஆனால் தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகள் ஏராளம்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைக்கும் முன்னரே அத்துறையில் இரட்டைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏவும் முடித்து…

நம் நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் தொழில்நுட்பப் பெண் பொறியாளர் என்ற விருதையும் பெற்று…

தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பரவ எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ, சாப்ஃட்வேர் என பல வழிகளில் எங்கள் காம்கேர் மூலம் நான் முனைந்த முயற்சிகளில் பல ‘முதன்’ முயற்சிகள். முன் உதாரணங்கள். ரோல் மாடல் ப்ராஜெக்ட்டுகள்.

அதற்கெல்லாம் சாட்சியாக, தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும்… ஏன் உலகளாவிய முறையில் பல்வேறு கல்விக் கூடங்களில் எங்கள் காம்கேரின் புத்தகங்களும், சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகளும் பாடத்திட்டமாக ஆய்வு குறிப்பேடுகளாக வீற்றிருக்கின்றன.

இன்று 30-வது வருடத்தில் விஜயதசமி நன்னாளில் துபாயில் புதிய ப்ராஜெக்ட் குறித்த சிந்தனையில்.

நீண்ட நெடும் பயணம்.

மன நலனுக்கும், உடல் நலனுக்கும் உதவிவரும் இயற்கைக்கும், இறை சக்திக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

பெற்றோருக்கும், உடன் பிறந்தோருக்கும், என்னுடன் பயணிக்கும் எங்கள் காம்கேர் நிறுவன பொறியாளர்களுக்கும் விஜயதசமி நன்னாளில் என் அன்பையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 15, 2021 | வெள்ளிக்கிழமை

(Visited 787 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon