டிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால்.
‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’
நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’ என்றேன்.
அவர் உற்சாகமாகி ‘திருநெல்வேலியில் இருந்தும்மா…என் பெயர் பாலசுப்ரமணியன்… எங்க ஊர்ல இருந்து 40 கி.மீ தொலைவில் பாபநாசநாதர் கோயில் உள்ளது. ஒருமுறை ஃபேமிலியோட வீட்டுக்கு வாங்க… பாபநாசநாதர், உலகம்மை தரிசனம் செய்துட்டு போகலாம்…’
இப்போது நான் நெகிழ்ச்சியாகி ‘ரொம்ப ரொம்ப நன்றி சார்… நிச்சயம் வரேன்… உங்களைப் போன்றோரின் அன்பினாலும் உளமார்ந்த வாழ்த்துக்களினாலும் தான் நான் வளர்ந்துகொண்டிருக்கிறேன்…’
72 வயது வாசகரின் போன் அழைப்பில் அன்பு, பண்பு, பாசம், நேசம், வாழ்த்து அத்தனையையும் என்னால் உணர முடிந்தது. பாபநாசநாதர், பாலசுப்ரமணியன் உருவில் என்னை வாழ்த்தி அழைக்கிறார்.
‘தெய்வம் மனுஷ ரூபனே’
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
16-12-2017