ஓம் ஷாந்தி – குமுதம் ப்ரியா கல்யாணராமன்!

 

‘வணக்கம். நலமா? யானை பதிவு மிக நெகிழ்ச்சி. குமுதம் அரசு பதில்களில் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?’

– இப்படி என் அனுமதி கேட்டு மெசஞ்சரில் ஒரு தகவல். 2020 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஜூன் மாதத்தில் ஒரு நாள் (06-06-2020) வந்திருந்தது.

கர்ப்பமாக இருந்த யானை ஒன்று வெடி வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு இறந்தபோது மிக நெகிழ்ச்சியாக அந்த யானையும் அந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டி யானையும் பேசிக்கொள்வதைப் போன்ற ஒரு பதிவை ‘அம்மா பசிக்கிறது!’ என்ற தலைப்பில் எழுதி இருந்தேன்.

நான் அனுமதி கொடுத்தவுடன் அந்த வார குமுதம் இதழிலேயே அரசு பதில்களில் ‘சமீபத்தில் உம் மனதை கலங்கடித்த ஒரு விஷயம்? என்ற தலைப்பிலான கேள்விக்கு மூன்று பக்கத்துக்கு என் பதிவை பதிலாகக் கொடுத்திருந்தார்.

ஒரு எழுத்தாளரின் படைப்பை அவர் உரிமை கேட்டு பயன்படுத்திய பத்திரிகை தர்மத்தை கடைபிடித்தவர் ப்ரியா கல்யாணராமன் அவர்கள். குமுதம் ஆசிரியர்.

அதற்கு முன் அவரை பார்த்ததில்லை. பேசியதில்லை. நடுத்தர வயது. அவர் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி சற்று முன் கிடைத்தது. நம்ப முடியவில்லை.

ஓம் ஷாந்தி!

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 22, 2022 | புதன் | மாலை 5.00 மணி

(Visited 111 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon