தென்றல்: பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! (March 2010)

‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!’
தென்றல் பத்திரிகையில் வாசிக்க: Thendral Issue March 2010

விமானத்தில்!

2010 – ல் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையான தென்றல் மார்ச் மகளிர் சிறப்பிதழும் என் சீட்டின் முன்னே வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகளுடன் இருந்தது.

அந்த தென்றல் பத்திரிகையில் என் குறித்த சிறு நேர்காணலும் வந்திருந்தது. அப்போதுதான் எனக்கே தெரிந்தது நான் கொடுத்த நேர்காணல் அந்த இதழில் வெளியாகி உள்ளது என்ற விவரம்.

எத்தனையோ அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது நம்மைப் பற்றிய செய்தியுடன் ஒரு பத்திரிகையை நாமே நம் கையால் எடுத்து வாசிக்கும்போது இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி.

வானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வு என சொல்லலாம். ஆனால் நானோ வானத்தில்தானே பறந்துகொண்டிருக்கிறேன். அதனால் அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தேன். சிலர் உறங்கிக்கொண்டு, சிலர் படித்துக்கொண்டு, சிலர் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு டிவி பார்த்தபடி. நானோ தென்றல் பத்திரிகையை கையில் வைத்துக்கொண்டு,  ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!’ என்ற தலைப்பை பார்த்தபடி!

நானும் என்னைப் பற்றிய குறிப்பைத் தாங்கிய அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகையும் விமானப் பயணத்தில். சுகமான அனுபவம்!

2010-ல் வெளியான சிறு நேர்காணல் செய்தி. சுருக்கமான பத்தியில் எங்கள் காம்கேரின் அத்தனை பணிகளையும் அழகாக தொகுத்திருந்தார் அந்த பத்திரிகையாளர். இதோ உங்கள் பார்வைக்காக!

– தென்றல் மார்ச் 2010, Thendral Monthly Magazine for Tamil Living in North America 

(Visited 596 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon