தினத்தந்தி பத்திரிகையில் வாசிக்க: DinaThanthi 12 JAN 2002
‘சிடி கேசட்’ புதுசா இருக்கா?
சிடிக்கள் அறிமுகம் ஆகி இருந்த காலக்கட்டத்துக்கும் கேசட்டுகள் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்த சூழலுக்கும் இடையேயான மெல்லிய நூலிழையில் (Transition period) வெளியான எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதல் அனிமேஷன் படைப்பான ’தாத்தா பாட்டி நீதிக்கதைகள்’ என்ற சிடி வெளியீடு குறித்து தினத்தந்தியில் வெளியான செய்திக்குறிப்பு! 2002 ஆம் ஆண்டு!
அதில் என்ன விசேஷம் என்றால் குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் ‘சிடி கேசட் வெளியீடு’ என்று தலைப்பிட்டிருந்தார்கள். கேசட் காலம் மெல்ல மெல்ல உருமாறி சிடி காலத்துக்குள் நுழைந்து கொண்டிருந்ததால் பெரும்பாலானோர் கேசட் என்றே சொல்லி வந்தார்கள்.
‘சிடி வெளியீடா, கேசட் வெளியீடா கரெக்ட்டா சொல்லுங்க!’ வடிவேலுவின் குரலில் வாசிக்கவும்!
அப்போதெல்லாம் அனிமேஷன் நிறுவனங்களும் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக… அதில் இருந்து வெளிவரும் படைப்புகளும் ஆங்கிலத்தில்…. விலையும் 250 ரூபாய்க்கும் குறையாமல் இருந்த காலகட்டத்தில் எங்கள் காம்கேர் 99 ரூபாய்க்கு அனிமேஷன் சிடிக்களை அதுவும் அழகுத் தமிழில் உருவாக்கி விற்பனை செய்தது மக்களிடையே பெருத்த வரவெற்பை பெற்றது.
அதன் பிறகு எந்த நிறுவனம் அனிமேஷன் சிடிக்களை விற்பனை செய்தாலும் ‘தாத்தா பாட்டி கதை சொல்ற சிடிபோல’ வேறேதேனும் கிடைக்குமா? என கேட்ட ஆரம்பித்தனர் மக்கள்.
அந்த அளவுக்கு எங்கள் நிறுவனம் சாஃப்ட்வேர் துறையில் மட்டுமில்லாமல் அனிமேஷன் துறையிலும் தனி முத்திரை பெற்று ஒரு டிரெண்டை உருவாக்கியது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEo
Compcare Software