ஒரு டாக் ஷோ!

ஒரு டாக் ஷோ!

ஒருபக்கம் பெற்றோர். விதவிதமான உணவை சாப்பிட விரும்புபவர்கள்.

மறுபக்கம் அவர்கள் வளர்த்தெடுத்த பிள்ளைகள். அவர்கள் யாரும் அறியாப் பருவத்தினரோ அல்லது டீன் ஏஜினரோ அல்ல. 30+, 40+ 50+  என வெவ்வேறு வயதினர். பெற்றோரின் உடல் நலம் காரணமாக உணவு சம்மந்தமாக தடை போடும் பிள்ளைகள்.

பிள்ளைகள் பெற்றோரின் உடல்கருதி அவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு வைக்கிறார்கள். அதுதான் அடிப்படை உண்மை. ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்தான் என்னை யோசிக்க வைத்தன.

அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னா என்னால லீவு போட்டுட்டு பார்த்துக்க முடியாது…

நான் மேற்படிப்பு படிக்கிறேன். பெற்றோருக்கு உடம்பு முடியாம போயிட்டா கவனிச்சுக்க முடியாது…

அவங்க பொறுப்பு எங்களை வளர்த்ததுடன் முடியலை. எங்க பிள்ளைங்களையும் பார்த்துக்கணும், வளர்க்கணும்…

உடம்பு மோசமாயிட்டா மருத்துவ செலவு யார் செய்யறது… எங்களுக்கு வசதி இல்லை…

என் அக்காக்களை கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டாங்க… எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அவங்களுக்கு உடம்பு முடியாம போயிட்டா யார் கல்யாணம் செஞ்சுக் கொடுப்பா?

இந்தக் கோணத்தில்தான் பிள்ளைகளின் விவாதங்கள் இருந்தன.

அந்த இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்தேன். என் சிந்தனையை நானே கவனித்தேன்.

‘அப்பா அம்மா உடல் நலமில்லாமல் போனால் அந்த நோயின் தாக்கத்தை அவர்கள்தானே கஷ்டப்பட்டு சுமக்க வேண்டும். அந்த நோவை அவர்கள் அனுபவிக்கக் கூடாது. அவர்கள் கஷ்டப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. தாங்கவும் முடியாது…’

நாம் நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் உடல்நலம் இல்லாதபோது பணம், நேரம் போன்ற எல்லா காரணங்களை எல்லாம் விட நம்மை வாட்டுவதற்கான பிரதானக் காரணம் இதுவாகத்தானே இருக்க முடியும்?

அதை ஏன் யாருமே முன் வைக்கவில்லை. அந்த அளவுக்கு Materialistic World ஆக மாறிவிட்டதா ஊரும் உலகமும், ரத்தமும் சதையும்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 5,2022 | திங்கள்

(Visited 242 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon