சாதனா விருது – லைன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் (March 8, 2016)

Sadana Award by Lions Clubs International

லைன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மார்ச் 8, 2016 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஐடி துறையில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, மல்டிமீடியா அனிமேஷன், ஆவணப்படம், எழுத்து என பல்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கி வருவதற்காக சாதனா விருது வழங்கி சிறப்பித்தது. 

விருதுவழங்கும் விழாவில் என் மனதைக் கவர்ந்ததும், என்னை நெகிழ வைத்ததும்!

8, மார்ச் 2016. பெண்கள் தின விழா.

லைன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்சிக்கு ஒருவாரம் முன்பே, திருமதி. பார்வதி விஸ்வநாத் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, பெண்கள் தினத்தை ஒட்டி எனக்கு விருது கொடுக்க இருப்பதாகவும், அன்று வர முடியுமா என கேட்ட போது, அன்று வேறு எந்த புரோகிராமும் இல்லை என்பதை உறுதி செய்தபின்னர் மனமகிழ்ச்சியுடன் அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.

இதில் மருத்துவம், மீடியா, கலை, இலக்கியம், காவல்துறை, ஐடி… இப்படி  பல்துறைகளில் சிறப்பாக இயங்கிவரும் 20 பெண்களுக்கு ‘சாதனா விருது’ வழங்கி கெளரவித்தார்கள்.

ஐடி துறையில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, மல்டிமீடியா அனிமேஷன், ஆவணப்படம், எழுத்து என பல்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கி வருவதற்காகத்தான்  எனக்கு விருது.

பெண்கள் தினவிழா கொண்டாடுவது, கெளரவிப்பது, பரிசளிப்பது, விருதளிப்பது – இவை அனைத்தும் வழக்கமாக நடக்கக்கூடிய நிகழ்வுகள்தான். ஆனால், இந்த நிகழ்ச்சியில் என்ன புதுமை என்றால்…

பொதுவாக இதுபோன்ற விருது வழங்கும் விழாவில் நம்மைப் பற்றிய சிறுகுறிப்பைப் படித்து, நம் பெயரைச்சொல்லி அழைப்பார்கள். மேடைக்குச் சென்று விருதைப் பெற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி திரும்பி விடுவது வழக்கம்.

ஆனால் இங்கே ஒரு புதுமையான பெருமையான செயல்பாட்டைக் காண முடிந்தது. விருது வாங்குபவர்கள் அனைவரையும், பார்வையாளர்கள் அனைவரும் பார்க்க ஏதுவாக ஒரே வரிசையில் (Semi Circle) அமரச் செய்தார்கள்.

பிறகு சாதனையாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து மேடையின் நடுவில் ஒரு சிறப்பு நாற்காலியில் அமரச் செய்து, அவரின் சாதனைகளை 5-10 நிமிடங்கள் வரை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

பிறகு அந்த விழாவின் அங்கத்தினர்கள், சால்வை போர்த்த ஒருவர், சான்றிதழ் கொடுக்க ஒருவர், ஷீல்ட் வழங்க ஒருவர் என நம்மை கெளரவித்த பெருமை சிறப்பு.

இறுதியில் அனைவருக்கும் விருந்து அளித்தது ஒரு சம்பிரதாயமாக இல்லாமல், குடும்ப நிகழ்வுபோல்  பல்சுவை உணவை ஏற்பாடு செய்திருந்தது, வந்தோர் அனைவரையும் பரவசமடையச் செய்தது.

அனைவரும் புத்துணர்வுடனும், மனமகிழ்ச்சியுடனும் சென்றதைப் பார்க்கும்போது நானும் பரவசமானேன்.

No word to express more…

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

மார்ச் 8, 2016

(Visited 1,025 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon