சுதேசி தொழிலதிபர் விருது : Swadeshi Entrepreneur Award – By Swadeshi Jagaran Manch (July 19, 2008)

சுதேசி தொழிலதிபர் விருது : Swadeshi Entrepreneur Award – By Swadeshi Jagaran Manch

ஜூலை 19, 2008-ஆம் ஆண்டு கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு Swadeshi Entrepreneur Award என்ற விருதை Swadeshi Jagaran Manch வழங்கி சிறப்பித்தது. அந்த வகையில் சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு சுதேசி தொழிலதிபர் விருது (Swadeshi Entrepreneur Award) வழங்கப்பட்டது.

சுதேசி தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும்  நிகழ்ச்சி ஜூலை 19, 2008 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு: Swadeshi Jagaran Manch. நிகழ்ச்சித் தலைமை ஆடிட்டர் உயர்திரு.குருமூர்த்தி.

விருது பெற்றவர்கள் அனைவருமே அவரவர் துறையில் கடின உழைப்பால் உச்சத்தைத் தொட்டவர்கள். சொல்லப்போனால் அனைவரும் தொழிலதிபர்களே.

சாஃப்ட்வேர் துறை மென்பொருள் நிறுவனத்தின் சி.ஈ.ஓ என்ற முறையில் எனக்கும் அந்த விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் விருது பெறுபவர்களுக்குள் ஒரு சின்ன விவாதம். தொழிலதிபருக்கும் (Business Man) தொழில்முனைவோருக்கும் (Entrepreneur) என்ன வித்தியாசம் என்பதே அது.

தொழிலதிபர் தொழில்முனைவோர் இருசாராரும் செய்வது என்னவோ பிசினஸ்தான். ஆனாலும்  சிற்சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, மாதுளைப் பழம் ஒன்றை 50 ரூபாய்க்கு வாங்கி 70 ரூபாய்க்கு விற்கும் பழக்கடை முதலாளி தொழிலதிபர் என்ற பிரிவின்கீழ் வருவார். அதே மாதுளையை 50 ரூபாய்க்கு வாங்கி பக்குவமாக ஜூஸ் செய்து விற்று 90 ரூபாய் சம்பாதிப்பவர் தொழில்முனைவோர். பின்னாளில் அதே கிரியேட்டிவிடியின் அடிப்படையில் ஜூஸ் ஃபேக்ட்டரி வைத்து உலகமெங்கும் கிளைகள் ஆரம்பித்தால் தொழில்முனைவோர் தொழிலதிபராகிறார்.

  1. தொழிலதிபர்கள் பொருளை குறைந்த விலைக்கு வாங்கி அதில் கொஞ்சம் லாபம் வைத்து விற்பனை செய்வார்கள். அந்தந்த காலகட்டத்து ட்ரெண்ட்டுக்கு ஏற்ப அவர்கள் வியாபாரத்தை விரிவாக்கி பணம் சம்பாதிப்பார்கள்.

தொழில்முனைவோர்கள் செய்கின்ற வேலைகளில் கிரியேட்டிவிட்டி இருக்கும். முன் அனுபவம் எதுவும் இல்லை என்றாலும் மிக எளிமையாக தொடங்கிய செயலை தங்கள் கடின உழைப்பாலும் கிரியேட்டிவிட்டியாலும் உச்சத்துக்குக் கொண்டு செல்வார்கள். அவர்களின் செயல்பாடுகளும் படைப்புகளும் தனித்தன்மையுடன் இருக்கும்.

  1. தொழிலதிபர்கள் வரையறுக்கப்பட்ட பாதையில் பயணிப்பார்கள். ஏற்கெனவே உள்ள ஐடியாவின் அடிப்படையில் தொழிலை தொடங்கி படிப்படியாக லாபத்தின் அடிப்படையில் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.

தொழில்முனைவோர் தங்கள் பாதையை தாங்களே வரையறுப்பார்கள்.

  1. தொழிலதிபர்கள் வணிக சந்தையில் தங்கள் உழைப்பாலும், செயல்பாடுகளாலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவார்கள்.

தொழில்முனைவோர் தங்கள் கிரியேட்டிவிட்டியால் தங்களுக்கான வணிக சந்தையை உருவாக்குவார்கள்.

  1. தொழிலதிபர்களுக்கு எல்லாமே லாப நஷ்டக் கணக்குதான் என்பதால் வணிக சந்தையில் முட்டி மோதி உச்சத்துக்கு வருவார்கள்.

தொழில்முனைவோர் தங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுவதால், வணிக சந்தையில் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி புதுமையான செயல்பாடுகளால் முதன்மையாகத் திகழ்வார்கள்.

  1. தொழிலதிபர்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ள தொழிலையே செய்வதால் போட்டி அதிகம் இருக்கும். வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

தொழில்முனைவோர்கள் புதுமையாகவும் தனித்தன்மையுடனும் செயல்படுவதால் போட்டிகள் இருந்தாலும் வெற்றி சதவிகிதம் அதிகம் இருக்க வாய்ப்புண்டு.

  1. தொழிலதிபர்களின் குறிக்கோள் லாபம் மட்டுமே. மற்றதெல்லாம் அதற்கடுத்துதான்.

தொழில்முனைவோர்கள் லாபத்தை விட தங்கள் பணியாளர்கள் மற்றும் கஸ்டமர்களின் நலனையும் கருத்தில்கொள்வார்கள்.

தங்கள் தனிதன்மையால் தங்களுக்கானப் பாதையை உருவாக்கிக்கொண்ட தொழில்முனைவோர்கள் ஒரு கட்டத்தில் தொழிலதிபர்களாக மாறும்போது அவர்கள் உச்சத்தை அடைகிறார்கள்.

மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க், ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்கள் அனைவருமே தங்கள் புதுமையான ஐடியாக்களினால் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள். தொழில்முனைவோர்களாக இருந்து தொழிலதிபர்களாக விஸ்வரூபமெடுத்தவர்கள்.

இவர்களை முன் உதாரணம் காட்டிபேசி இந்த வரிசையில் நானும் இருப்பதாகச் சொல்லி விருதளித்தத் தருணம் வாழ்நாள் வரம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூலை 19, 2008

பத்திரிகை செய்திகள்

Read the news about the function
@ News Today Magazine news today July 20, 2008

தினமணி ஜுலை 20, 2008

 

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon