#கவிதை: உங்கள் தொப்பியில் புது இறகு!

‘Another feather in your cap’

அன்பை
பிறரிடம் எதிர்பார்த்து
நாம் ஏமாற்றம் அடைவது
நரகத்தை விட நரகம்!

அன்பை
காட்டும் / கொட்டும் இடத்தில்
நாம் இருப்பது
சொர்க்கத்தை விட சொர்க்கமாக
இருக்கும் என சொல்வதை விட
ஒருவித கர்வமாக இருக்கும்
என்று சொல்லலாம்.

அந்த கர்வத்துக்கு
கம்பீரம் என்றும்
தன்னம்பிக்கை என்றும்
பெயர் சூட்டிக்கொள்ளலாம்!

அந்தப் பெயர் கிடைப்பது
கொஞ்சம் கஷ்டம் தான்
மன்னிக்கவும்
கொஞ்சம் அல்ல,
நிறையவே கஷ்டம்தான்!

ஆனாலும்…

கிடைக்கவில்லை என
ஓரிடத்தில் தேங்கி
பின்னடைவதைவிட
ஓடிக்கொண்டே இருப்பது
உத்தமம் அல்லவா?

எப்படி?

கிடைக்கவில்லை எனில்
கொடுக்க ஆரம்பிப்பதுதான்
ஒரே வழி!

இதுவரை
இல்லாவிட்டால் பரவாயில்லை.
இனி நீங்களும்
முயற்சித்துத்தான் பாருங்களேன்.

‘Another feather in your cap’
என புது இறகு ஒன்று
உங்கள் தொப்பிக்குள்
தானாகவே பறந்துவந்து
ஒட்டிக் கொள்வதை
நீங்களே உணர்வீர்கள்!

வாழ்த்துகள்!

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜனவரி 24, 2023 | செவ்வாய்
#காம்கேர்_கவிதை #compcare_kavithai

(Visited 2,791 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon