‘சுடசுட’ப்பாக இயங்கிய ஓட்டல்!

அண்ணா சாலையில் ஒரு பணியை முடித்துகொண்டு சரவணபவன் ஓட்டலில் காபி குடிக்கலாம் என நினைத்துத் தேடினேன். காணவில்லை. சென்னையில் பல இடங்களில் சரவண பவன் மூடப்பட்டு சிலபல வருடங்கள் ஆகிவிட்டன என தெரிந்தாலும் பிசியான இடங்களில் மூடப்பட்டிருக்காது என்ற அநுமானம்.

அந்தப் பகுதி முழுவதும் புதிதாக எழுப்பப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள். சரவண பவன் முன்பிருந்த இடத்தில், ஒரு கட்டிடம் வானுயர எழும்பிக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களிடம் கேட்டால் ‘சரவண பவனா?’ என்று ஏதோ புதிதாக ஒரு பெயரை கேட்பது போல் கேட்டார்கள். ஆன்லைனில் அந்த முகவரியில் அதே சரவண பவன் இருந்ததாகக் காட்டியதால் போன் செய்து கேட்டபோது அந்த கிளை மூடப்பட்டு 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன என சொன்னார்கள்.

ஓட்டலுக்குச் சென்றால் சாப்பிட மட்டும் செல்வதில்லை. அங்கு நடக்கும் வியாபார உத்திகளை கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதுபோலவே இன்றும் காபி குடிப்பது இரண்டாம் பட்சம்தான்.

பரபரப்பான அந்த சாலையில் அதைவிட ‘சுடச்சுட’ப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஓட்டல் இருந்த இடத்தில் வேறொரு கட்டிடம் எழும்பிக் கொண்டிருப்பதைக் காணும்போது உயிருடன் இருந்தவர் இறந்து போனதைப் போன்ற வெறுமை மனம் முழுவதும்.

சென்ற வருடம் துபாய் சென்றிருந்தபோதும் அங்குள்ள சரவண பவனிலும் நான் பார்த்த வரை அத்தனைப் பொலிவில்லை.

அலுவலகம் வந்து காபி கலந்து குடிக்கும் வரை இதே எண்ணங்கள்தான் மனதுக்குள் சுழற்றி சுழற்றி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

ஜனவரி 25, 2023 | புதன்

(Visited 583 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon