பேசக் கூட லாஜிக்கா?
நான் பரம்பரை மேடைப் பேச்சாளர் அல்ல. பள்ளி கல்லூரியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதும் இல்லை.
ஆனாலும் பார்வையாளர்கள் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு பேச முடிகிறது என்றால் அதற்கு நான் பின்பற்றும் மூன்று உத்திகள்…
1. என் முன்னால் யாருமே இல்லை. பார்வையாளர் பகுதியில் மிக பிரமாண்டமான கண்ணாடி மட்டுமே உள்ளது. அதில் என் முகம் மட்டுமே தெரியும் என்ற ‘கற்பனையான’ நம்பிக்கை.
2. அமைதியாக பேசினாலும் உண்மையைப் பேச வேண்டும் என்ற ’நிஜமான’ உறுதி.
3. முக்கியமான கருத்துக்களை ஹைலைட் செய்வதைவிட பேசும் எல்லாவற்றையுமே ஹைலைட்டாக இருக்கும்படி சுருக்கமாகப் பேசுவது என்ற ’உளமார்ந்த’ குறிக்கோள்.
இப்போ இந்தப் பதிவு ஏன்?
வர இருக்கும் ஒரு மேடை பேச்சுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருந்ததன் தாக்கம்! வேறொன்றும் இல்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜனவரி 31, 2023 | செவ்வாய்