#கவிதை: நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா?

நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா?

சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களா?
பிசியான நபரா?
நல்ல திறமைசாலியா?

இதனால்

குறைந்த நேரத்தில்
பல வேலைகளை
முடிக்கும் நபரா?
அதுவும் காலம் தாழ்த்தாமல்
உடனுக்குடன்
முடித்துப் போட்டுவிட்டு
அடுத்த வேலையை
கவனிக்கச் சென்றுவிடுகிறீர்களா?

அப்படியானால்
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்குக் கிடைக்கும் பெயர்

உங்களுக்கு
நேரம் நிறைய இருக்கிறது…
பொழுதுபோகவில்லை…
வேலையா வெட்டியா…
கொடுத்து வைத்திருக்க வேண்டும்
இப்படி ரிலாக்ஸ்டாக இருப்பதற்கு!

ஆனால்

நேரம் இருந்தும்…
அத்தனை பிசியாக இல்லாவிட்டாலும்
வெறும் சோம்பேறித்தனத்தினால்
காலம் தாழ்த்தி
கடமைகளைச் செய்பவர்களுக்கு

அசால்ட்டாய் கிடைக்கும் பெயர்
என்ன தெரியுமா?

அவர் ரொம்ப பிசி!

நம்மைச் சுற்றி நடக்கும்
அதிசயங்களில்
இதுவும் ஒன்று!

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

ஜனவரி 28, 2023 | சனிக்கிழமை
#காம்கேர்_கவிதை #compcare_kavithai

(Visited 561 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon