இயற்கையும் செயற்கையும்!
செயற்கை நுண்ணறிவு குறித்த சிறிய கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட நடுத்தர வயதான ஒருவர் என்னை தன் அறிவால் மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்விகளை அடுக்கினார். எனக்கும் அவருக்குமான சிறிய உரையாடலில் Ai-ன் அடிப்படையை சொல்லி இருக்கிறேன்.
He: இவ்வளவு சொல்றீங்களே, Ai இயற்கையா பாட்டுப் பாடுமா?
Me: பாடாது…
He: ஆங்…
He: இயற்கையா ஒரு காவியத்தைப் படைக்குமா Ai?
Me: படைக்காது…
He: ஆங்…
He: இயற்கையா விவசாயம் செய்யுமா Ai?
Me: செய்யாது…
He: ஆங்… மனிதன் தாங்க உசத்தி… அவனால தான் இயற்கையா எல்லாத்தையும் உற்பத்தி செய்ய முடியும்…
இப்போதுதான் நான் வாய் திறந்தேன்.
‘ஆமாங்க… Ai என்பதே செயற்கை தானே…பின்னர் அதனிடம் எப்படி இயற்கையா எல்லாத்தையும் எதிர்பார்க்க முடியும்? Ai என்பது நமக்கு உதவுவதற்காக நாம் உருவாக்கியுள்ள இயந்திரம் / அப்ளிக்கேஷன் / சாஃப்ட்வேர். அதை நமக்கு உதவ வைப்போம், நம்மைப் போலவே செயல்பட வைப்போம், நம்மையே மிஞ்சும் அளவுக்கு இயங்க வைக்க முயற்சிப்போம். அதன் லகானே நம் கையில்தான். பின்னர் ஏன் செயற்கையை இயற்கையுடன் ஒப்பிடணும்? எதற்காக Ai நம்மை அழித்துவிடும், சோம்பேறி ஆக்கிவிடும், வேலையை பறித்துவிடும் என்றெல்லாம் பயப்படணும்’
இவ்வளவுதான் செயற்கை நுண்ணறிவு. இதன் பின்னணியில் தான் அது தொழில்நுட்ப ரீதியாக வடிவமைக்கப்படுகிறது.
பேசுவோம்…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 14, 2023 | செவ்வாய்