Comfort Zone!

Comfort Zone!

சமீபத்தில் ஒரு பேட்டிக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்… பிரசுரமான பேட்டியில் இது இடம் பெறாவிட்டாலும் என்னைப் பொருத்தவரை இது முக்கியமான கேள்வி.

கேள்வி: தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பெண்கள் வேலை செய்தாலும் உங்களைப் போல நிறைய பெண்கள் தொழில் தொடங்காததற்கும், வேலை செய்யும் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளுக்கு வராததற்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

பதில்: Comfort Zone ஐ விட்டு வெளியே வரத் தயாராகும் பெண்கள் தைரியமாக எல்லாத்துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தொழில்துறையிலும் தான்.

Comfort Zone என்பதை நான் தவறாக சொல்லவில்லை. இரவு பணி செய்ய முடியாது, வெளிநாடு செல்ல வீட்டில் அனுமதி இல்லை, இந்த வேலைக்கு பெற்றோர் அனுமதி கொடுக்க மாட்டார்கள், எனக்கு இந்த வேலை பயமாக உள்ளது, அதிக பணம் சம்பாதிக்க முடியாது, நிறைய உழைக்க வேண்டுமே, ரிஸ்க் அதிகம் என்பது போன்ற காரணங்களினால் தங்கள் Comfort Zone விட்டு வெளியே வரவில்லை என்றால் அவர்களுக்குதான் வாய்ப்புகள் விட்டு விலகுகின்றன.

இவைதான் பெண்கள் தொழில் தொடங்குவதற்கும், உயர் பதவிக்குச் செல்வதிலும் உள்ள சிக்கல்கள்.

இதில் சில காரணங்களினால் ஆண்களும் தொழில்துறைக்கு வருவதில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஐடிதுறையில் பிழிந்தெடுப்பார்கள் என்று சொல்லியே அந்த வேலைக்குச் செல்ல மாட்டேன் என காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தும் பெயரெடுத்த ஐடி நிறுவனத்தில் சேர மறுத்து பொறியியல் படித்து முடித்த இளைஞன் ஒருவன் இரண்டாண்டுகளாக எந்தக் குறுக்கோளும் இல்லாமல் வீட்டில் இருப்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொண்டு ஒரு அம்மா என்னிடம் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொல்கிறேன், ஆணோ பெண்ணோ அவரவர் எண்ணம்போல் வாழ்வு, முயற்சி போல ஏற்றம். அவ்வளவுதான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

மார்ச் 20, 2023 | திங்கள்

(Visited 4,576 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon