#AI: கொழுக்கட்டையும் ஆக்மென்டட் ரியாலிட்டியும்!

கொழுக்கட்டையும் ஆக்மென்டட் ரியாலிட்டியும்!

சிறு துரும்பும் பல்குத்த உதவும். சென்ற வாரம் எங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டையை புகைப்படம் எடுத்தேன் வழக்கம்போல். அது எங்கு பயன்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.

அதை நாங்கள் தயாரித்து வரும் மெட்டாவெர்ஸ் ப்ராஜெக்ட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டோம். கொழுக்கட்டையை சாப்பிடலாம். தொழில்நுட்பப் ப்ராஜெக்ட்டுக்கு எப்படிப் பயன்படுத்திக் கொண்டேன் என யோசிக்கிறீர்களா?

எதிர்காலத்தில், ஓட்டல்களில் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்துக்குள் ஒன்றான ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. மெனுகார்டுக்கு பதிலாக இந்தத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் டிஜிட்டல் மெனு கார்டுகள் வெளிநாடுகளில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. அது மட்டும் இல்லாமல், நாம் ஆர்டர் செய்யும் உணவு வருவதற்கு முன்பே அதில் என்னென்ன இன்கிரெடியன்ஸ் உள்ளது என்பதையும் அந்த உணவை கண் முன் கொண்டுவந்து மொபைல் காமிரா மூலம் ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ள முடியும்.

மொபைல் ஆப் மூலம் காமிரா வழியாக அவை வெளிப்படுத்தப்படும் அல்லது ஓட்டல்களிலேயே வைத்துள்ள ஆக்மென்டட் ரியாலிட்டி டிஸ்ப்ளேயில் நம் மொபைல் காமிரா மூலம் ஸ்கேன் செய்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு டேபிளிலும் மெனுகார்டு போல ஆன்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனம் ஒன்றும் வைக்கப்படலாம்.

மேலும் நம் டேபிளுக்கு நாம் ஆர்டர் செய்த உணவு வந்த பிறகு அதன் மீது நம் மொபைல் ஆப் மூலம், காமிராவால் ஸ்கேன் செய்தால் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் அதிலுள்ள இன்கிரெடியன்ஸை புரொஜெக்ட்டரில் இருந்து வரும் வெளிச்சத்தைப் போல உணவின் மீதே பட்டியலிடும்.

ஆக, இந்தத் தொழில்நுட்பம் மிகவும் ‘சுவை’யாக இருக்கிறதல்லவா?

நாங்களும் எங்கள் காம்கேரில் இந்தத் தொழில்நுட்பத்துக்காக ஒரு ப்ராஜெக்ட் செய்து இம்ப்ளிமென்ட் செய்தோம். அதற்குத்தான் நாங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டையைப் பயன்படுத்தினோம்.

எங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டையும், எங்கள் காம்கேரில் இம்ப்ளிமெண்ட் செய்த ப்ராஜெக்ட்டின் டெமோவையும் உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூன் 23, 2023 | வெள்ளிக்கிழமை

 

(Visited 670 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon