கடமையும், பொறுப்பும்!
எங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு விருந்தினர்களை வரவழைத்து உபசரிப்போம்.
நேற்று அப்பாவுக்கு நட்சத்திரப் பிறந்த நாள். இந்த முறை எங்கள் விருந்தினர் அப்பாவின் மாமா பெண் 86 வயதான பாட்டி, 96 வயதான தாத்தா.
உடன் வந்திருந்த சஷ்டியப்த பூர்த்தி நிறைவடைந்த அவர்களின் மகனுக்கும், மருமகளுக்கும் என் அப்பா சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது எல்லாம் தெரியாததால் அப்பா செய்த சர்க்கரைப் பொங்கல், அப்பா செய்த மைசூர்பாகு என நான் பரிமாறிய போது அதிசயித்தார்கள்.
அப்பா மிக நன்றாக சமைப்பார் என்று என் அம்மா கூடுதல் நற்சான்றிதழ் கொடுத்தபோது அவர்களின் ஆச்சர்யம் பிரவாகமெடுத்தது.
கூடவே, வந்திருந்த பாட்டியும் தாத்தாவும் சிறு வயதில் இருந்தே சமையல் மற்றும் வீட்டைப் பராமரிக்கும் என் அப்பாவின் அருமை பெருமையை எல்லாம் தங்கள் மகனிடமும் மருமகளிடமும் பெருமையாக சொன்னபோது, அவர்கள் இருவரும் ‘மாமா, உங்களுக்கு சமைப்பதில் அவ்வளவு ஆர்வமா?’ என்று கேட்டார்கள்.
அப்பா சொன்ன பதில்: ‘என் கடமை, பொறுப்பு’ என்றார்.
எவ்வளவு அழகான பதில்.
புகைப்படக் குறிப்பு: எத்தனை வயது தாத்தா பாட்டியானால் என்ன நம்மிடம் வந்துவிட்டால் லேப்டாப்பை கற்றுக் கொடுத்துவிட வேண்டியதுதான். புகைப்படக் கைங்கர்யம் அடியேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூலை 3, 2023 | திங்கள்