#மலேசியா: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குழுவின் ஓர் அங்கமாக!

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (International Association of Tamil Research – IATR) குறித்த குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த நாளில் இருந்தே (2021) அந்தக் குழுவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது.

அந்தக் குழுவுக்குத் தேவையான வீடியோக்கள் தயார் செய்து தருவதிலும், அவர்களின் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கித் தரும் ப்ராஜெக்ட்டிலும் இணைந்து செயலாற்றி வந்திருக்கிறேன்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக என்னுடன் நல்ல நட்புடனும் அதே சமயம் வியாபார ரீதியாக எங்கள் காம்கேருடன் நல்லப் புரிந்துணர்வுடனும் இணைந்து செயல்படும் திரு நந்தன் மாசிலாமணி அவர்கள் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியப் பிரிவின் செயலாளர் என்பதால் இது சாத்தியமாயிற்று.

சார்ந்தோர் அனைவருக்கும் நன்றி!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 2023

மாதிரிக்கு …

 

 

(Visited 820 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon