#Ai: மருத்துவரின் பார்வையில் காம்கேரின் ஏஐ நிகழ்ச்சி!

மருத்துவரின் பார்வையில் காம்கேரின் ஏஐ நிகழ்ச்சி!

மருத்துவர் A. அபிஷேகவல்லி
(Dr A.Abishegavalli)
காரைக்குடி

காம்கேர் புவனேஸ்வரி  அவர்களை  சில வருடங்களாக பேஸ்புக் மூலமாகத்தான் தெரியும். இவருடைய எழுத்தை தொடர்ந்து வாசிப்பவள் நான்.

இவரைப் போலவே பேசும் Ai – ஐ வடிவமைத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட  வீடியோவை பார்த்து வியப்படைந்தேன். இவர் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் Ai’ என்ற நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக பதிவிட்டவுடன் உடனடியாக அதில் தரப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டேன்.

அந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் உண்டு என்றும், அந்த கட்டணம் மிகவும் நல்ல காரியத்திற்காக செலவிடப்படுகிறது என்று தெரிந்தவுடன்,  உடனே ரெஜிஸ்டர் செய்து விட்டேன்.

மருத்துவத்துறையில் நுழைந்துவிட்டால் வேறு எந்தத் துறை பற்றியும் தெரிந்து கொள்ள நேரமே இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த மனக்குறை எப்போதும் எனக்கு  இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான்,  காம்கேர் புவனேஸ்வரி மேடம் இப்படி Ai குறித்து அறிமுக நிகழ்ச்சி நடத்துகிறார் என்று தெரிந்தவுடன்  உடனடியாக அதில் கலந்துகொள்ள முடிவெடுத்தேன்.

Ai அறிமுக நிகழ்ச்சி என்று அவர் கூறினாலும், ஒரு 10 வருடங்களுக்கு  பின்  நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மேம்படுத்தப்பட்ட விஷயங்களை எல்லாம் இப்போதே அவர் சொல்லித் தந்ததாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

மிகவும் எளிமையாக அழகாக தமிழில் விளக்கிப் பேசினார். ஸ்லைடுகள் மற்றும் வீடியோக்கள் மூலமாக  சொன்னது  மிக நன்றாகப் புரிந்தது.

தொழில்நுட்ப உலகில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட ஒரு திருப்தி.  சர்டிஃபிகேட் வேறு தந்தார்களா, அதை என்னுடைய மருத்துவ தோழமைகளிடம் காண்பித்து கொஞ்சம் அலட்டிக் கொண்டேன்.

one step ahead என்பார்களே அது போல் ஒரு சந்தோஷம் . நன்றி மேடம். உங்களின் இந்த இனிய பணி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் .

மருத்துவர் A. அபிஷேகவல்லி
(Dr A.Abishegavalli)
காரைக்குடி
செப்டம்பர் 1, 2023 | வெள்ளிக்கிழமை

(Visited 666 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon