Work From Home

Work From Home

சென்ற வருடம் வேலை கிடைத்து Work From Home வேலை செய்து வரும் அண்ணனுக்கும், இந்த வருடம் வேலை கிடைத்து Work From Home வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் தங்கைக்கும் அடிதடி சண்டை வருவதை சமாளிக்க முடியவில்லையாம் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடொன்றில் !

கல்லூரியில் காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 3 வருடங்களாக Work From Home வேலை செய்துவரும் பலரை நான் சந்தித்திருக்கிறேன் என் குடும்ப உறவினர்கள் வட்டத்திலேயே!

வேலைக்குச் செல்வதற்காக காலையில் சீக்கிரம் எழுந்து, குளித்து, தலைசீவி, நல்லதாக உடை அணிந்துகொண்டு, அலுவலகத்துக்கு நேரத்துக்குச் சென்று, மனிதர்களை சந்தித்து, உடன் வேலைப்பார்ப்பவர்களுடன் பழகுவது, சீனியர்களின் அனுபவங்களை பெறுவது, ஜூனியர்களுடன் தோழமையுடன் பழகக் கற்றுக்கொள்வது, மாலையில் உழைத்துக் களைத்த மூளையுடன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, வீட்டில் உள்ளவர்களுடன் பேசி, நேரத்துக்கு உறங்கி என எத்தனை சுவாரஸ்யங்களை இழக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள் என்று சற்று வருத்தமாக இருந்தது.

வேலையில் அனுபவம் பெற்று நடுத்தர வயதினருக்கு Work From Home கிடைத்தால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் அது பேருதவியாக இருக்கும். எங்கள் காம்கேரில் நாங்கள் இப்படித்தான் செய்கிறோம். இளைஞர்களுக்கு ஒருபோதும் Work From Home கிடையாது.

காரணம், இளைஞர்களுக்கு Work From Home சோம்பேறித்தனத்தையே வளர்க்கிறது. நான் மட்டும் சொல்லவில்லை. Work From Home -ல் வேலைசெய்யும் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரின் கருத்தும் இதுவே.

சென்ற வருடம் எங்கள் காம்கேரில் பணிக்குச் சேர்ந்த இரண்டு இளம் வயது பொறியாளர்களின் பெற்றோர் என்னிடம் வைத்த வேண்டுகோளும் இதுவே.  ‘தயவு செய்து Work From Home வேண்டாம் என் பிள்ளைக்கு!’

வாழ்க்கையில்தான் பெற்றோருக்குப் புதிது புதிதாய் எத்தனை எத்தனைப் பிரச்சனைகள்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 30, 2023 | சனிக்கிழமை

(Visited 443 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon