57 வயதில் Ai படிக்க முடியுமா?
என் புத்தகங்களை படித்து பயன்பெற்றுவரும் ஒரு அன்பர் வாட்ஸ் அப்பில் கேட்டிருந்த கேள்வி. பலருக்கும் பயன்படும் என்பதால் பொதுவெளியில் பகிர்ந்துள்ளேன்.
என் வயது 57. நான் ஏஐ புத்தகம் வாங்கி படித்து தேர்ச்சி பெற கம்ப்யூட்டரில் அடிப்படை தகுதி என்ன வேண்டும்? மேலும் நான் பி.காம் படித்துள்ளேன். இப்போது வேலைக்காக எம்.சி.ஏ படிக்க விரும்புகிறேன். புத்தகங்கள் ஆங்கில மொழியில் உள்ளதால் அவற்றின் தமிழாக்கப் புத்தகங்கள் தங்களிடம் இருக்கிறதா மேடம்? – கதிர்வேல்
என் பதில்:
Hello sir,
நான் எழுதியுள்ள அசத்தும் Ai-Part1, அசத்தும் Ai-Part2 இரண்டையும் நீங்கள் வாங்கி தேர்ச்சி பெற கம்ப்யூட்டர் அடிப்படை எதுவும் தெரிந்திருக்க தேவையில்லை. தொழில்நுட்பம் சாராதோருக்கும் புரியும் வகையில்தான் நான் எழுதி உள்ளேன்.
இந்த லிங்கில் நான் எழுதிய புத்தகங்கள் உள்ளன. எதுவும் மொழிபெயர்ப்பு எல்லாம் கிடையாது. என் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்காக தமிழில் எழுதியவை. நான் மொழிபெயர்ப்பு நூல்கள் எதையும் எழுதியதில்லை, மொழிபெயர்ப்பாளரும் அல்ல. https://compcarebhuvaneswari.com/?p=10483
MCA படித்து உங்கள் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். அதற்காகவே வேலை கிடைத்துவிடும் என்பதில்லை. அதற்கு உத்திரவாதமும் கிடையாது உங்கள் வயது + துறை சார்ந்த அனுபவம் இவற்றின் அடிப்படையில்தான் ஐடி துறையில் வேலை கிடைக்கும். MCA, BE, BTECH இதெல்லாம் Fresher களுக்குத்தான் பயன்படும். தகவலுக்காக சொல்கிறேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 19, 2024 | ஞாயிறு