புரோகிராம் எழுதத் தெரியாதவர்கள் Ai பயன்படுத்த முடியுமா?
வங்கியில் பணிபுரியும் ஒரு அன்பரின் கேள்வி:
எங்கள் வங்கியில் எல்லா துறைகளிலும் பணிபுரிபவர்களிடமும் ஒரு சர்வே எடுத்துள்ளார்கள். அதில் ‘உங்களுக்கு Ai அப்டேட் செய்துகொள்ள விருப்பமா? Ai குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என்பதை சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்லவும்’ என கேட்டிருந்தார்கள். எனக்கு புரோகிராம் எழுதத் தெரியாது. என்னால் எப்படி Ai பழக முடியும்?
என் பதில்:
Ai-ல் மட்டுமல்ல எல்லா சாஃப்ட்வேர்களிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று Ai – க்காக புரோகிராம் எழுதுபவர்கள். இரண்டாவது Ai – டூல்களை / சாஃப்ட்வேர்களை / ஆப்களை பயன்படுத்துபவர்கள்.
முதலாவது பிரிவினர்தான் புரோகிராம் எழுதும் பிரிவில் வருவார்கள். இரண்டாவது பிரிவினர் Ai – காக எழுதப்பட்ட புரோகிராம்களை, சாஃப்ட்வேர்களை, ஆப்களை, டூல்களை பயன்படுத்தும் பிரிவில் வருவார்கள். நீங்கள் வர இருப்பது இரண்டாவது பிரிவில். எனவே நீங்கள் Ai டூல்களை பயன்படுத்தப் பயிற்சி எடுத்தால் போதும். கவலைப்படாதீர்கள்.
இவ்வளவு ஏன்? வாஷிங் மெஷின், இன்ஸ்ட்ண்ட் பாட் போன்றவற்றை உருவாக்குபவர்கள் ஒரு பிரிவினர். அவற்றைப் பயன்படுத்தும் மக்கள் மற்றொரு பிரிவினர்.
இதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், Ai காக நான் குறிப்பிட்ட இரண்டு பிரிவினர்களையும் புரிந்துகொள்ள முடியும்.
தேவைப்பட்டால் நான் எளிய தமிழில் எழுதி உள்ள ‘அசத்தும் Ai’ – Part1, ’அசத்தும் Ai’ – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்கிப் படியுங்கள்.
என்னுடைய இந்த பதில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பொதுவெளியில் பகிர்ந்துள்ளேன்.
குறிப்பு: எளிய தமிழில் சாஃப்ட்வேர் துறை சாராதவர்களுக்கும் புரியும்படி நான் எழுதியுள்ள அசத்தும் Ai – இரண்டு நூல்களை வாங்க வேண்டுமா? வாட்ஸ் அப் செய்யுங்கள்: 9444949921
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 20, 2024 | திங்கள்