நிதர்சனங்களும், அபத்தங்களும்!
என்னையும் காம்கேரையும் 25, 30 வருடங்களுக்கு முன் அறிந்தவர்கள், என்னைப் பற்றியோ (காம்கேர் புவனேஸ்வரி) பற்றியோ அல்லது எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் பற்றியோ எதையுமே அப்டேட் செய்துகொள்ளாமல், நீண்ட காலத்துக்குப் பிறகு என்னை சந்திக்கவோ அல்லது போனில் பேசவோ செய்பவர்கள் ‘நீங்க காம்கேர்ன்னு ஒரு வச்சிருந்தீங்களே…. அது இருக்கா… மூடிட்டீங்களா’ அப்படின்னு கேட்கும்போது அவர்களுக்கு ‘உங்களுக்கு ஒரு குழந்தை இருந்ததே அது இப்ப இருக்கா?’ அப்படின்னு பதில் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. நிச்சயம் அவர்கள் குழந்தைகளுக்கு இப்போது 25, 30 வயதிருக்கும். அதற்கு மேலும் வயதிருக்கலாம். அதுபோல்தானே எங்கள் காம்கேரும்?
அப்படியானால் 30 வருடங்களுக்கு முன் ஒரு பெண் பிசினஸ் ஆரம்பித்திருந்தால் நிச்சயம் அதை தொடர்ச்சியாக இருக்க மாட்டாள் என்ற சராசரி எண்ணம்தானே அவர்களுடையது?
உலகம் முழுவதும் காம்கேரின் தயாரிப்புகள் உள்ளன. உங்களுக்கு தெரியவில்லையே? நீங்கள் அப்டேட் ஆகவில்லையா? என்று மென்மையாக கேட்டு நகர்ந்துவிடுகிறேன். இன்றும் ஒருவருக்கு இப்படி பதில் சொன்னேன்.
வழக்கம்போல் காதில் கூட அவர்களின் அபத்தமான கேள்விகளை வைத்திருப்பதில்லை! என் துறையில் நிலைத்திருப்பதன் முக்கிய காரணியும் இந்த சூட்சுமமே!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 19, 2024 | ஞாயிறு