அனைவருக்கும் வணக்கம்.
அறம் வளர்ப்போம் – இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் மகிழ்ச்சியுடன் அதுகுறித்து சிறு அப்டேட்!
உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படைப்பு ‘அறம் வளர்ப்போம்’.
ஆத்திச்சூடி – 1 வரியாலும், திருக்குறள் – 2 வரிகளாலும், நாலடியார் – 4 வரிகளாலும் எழுதப்பட்டு அதன் மூலம் அறத்தை விவரிக்கின்றன.
அதுபோல, நான் (காம்கேர் புவனேஸ்வரி) உருவாக்கியுள்ள ‘அறம் வளர்ப்போம்’ – மூன்று வரிகளால் ஆன அறநூல், உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அறநூலும் இதுவே!
இந்த நூலை வருடத்தின் 365 நாட்களும் அல்லது பள்ளி வேலை நாட்களில் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்கள் உரையாடும் வகையில் எழுதி உள்ளேன்.
ஆகவே பாகம்-1, பாகம்-2, பாகம்-3 என 10 பாகங்கள் என தீர்மானித்துள்ளேன். தற்சமயம் பாகம்-1, பாகம்-2 முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்த பாகங்கள் உருவாகிக் கொண்டே உள்ளன.
இந்த அறநூலுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு அறவார்த்தைக்கும் பள்ளி மாணவர்களை வைத்து அவர்கள் தங்கள் கற்பனையில் கதை சொல்லச் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.
அவற்றையும் இந்த படைப்பின் அடுத்தடுத்த வெர்ஷன்களில் இணைத்து எதிர்காலத்தில் மாணவர்களுக்கு என்னால் ஆன வகையில் அறத்தை சிறு துளியேனும் விதைத்துச் செல்ல முடிவெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஒருசில பள்ளிகளில் ‘தினந்தோறும் ஒரு அறவார்த்தை’ என்ற பெயரில் இந்த அறநூலில் நான் எழுதி உள்ள அறவார்த்தைகளுக்கு மாணவர்கள் கதைகள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
தினமும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த நூலில் உள்ள அறவார்த்தையை எடுத்துச் சொல்லி நான் கொடுத்துள்ள அறவிளக்கத்தை புரிய வைக்க வேண்டும். அதனை புரிந்துகொண்ட மாணவர்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கற்பனையில் ஆன சிறு கதையை சொல்லலாம். அவை எதிர்காலத்தில் ‘அறம் வளர்ப்போம்’ – படைப்பில் இடம்பெறும். அந்த அறத்தை சொல்லிக் கொடுத்த ஆசிரியர் பெயரும் இடம்பெறும்.
இது ஒரு தொடக்கமே. இந்தத் திட்டத்தில் தங்கள் பள்ளியும் சேர்ந்து பயனடைய விரும்புவோர் எங்கள் வாட்ஸ் அப் எண்ணில் – 9444949921 தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர், சென்னை
மார்ச் 22, 2025 | சனிக்கிழமை
#அறம்வளர்ப்பொம், #AramValarppoom, #காம்கேர்புவனேஸ்வரி, #compcarebhuvaneswari
காம்கேர் டிவியில் ‘அறம் வளர்ப்போம்’ – இரண்டு பாகங்கள் உங்கள் பார்வைக்காக!