நம் தகவல்கள் பரிசோதனைக்கு!
Ai காம்கேர் கே. புவனேஸ்வரி! எனக்கு இந்த கெட் அப் மிகவும் பிடித்துள்ளது. பொருத்தமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.
நம் மக்களுக்கு Ai குறித்த விழிப்புணர்வு 2023 க்கு பிறகுதான் ஆரம்பித்துள்ளது. இதே துறையில் 33 வருடங்களாக இயங்கி வரும் நான் எங்கள் காம்கேரில் 1992 ல் இருந்தே Ai குறித்த பல ஆராய்ச்சிகளை தொடங்கி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறேன். பல்வேறு ப்ராஜெக்ட்டுகளை வெற்றிகரமாக வெளியிட்டும் இருக்கிறோம்.
2024 புத்தகக் கண்காட்சியில் Ai க்காக நான் எழுதிய இரண்டு நூல்களிலும் எங்கள் காம்கேரில் நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்கள் மூலம் என் உருவத்துக்கு Ai அவதார்களை உருவாக்கி இருந்தோம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவை வாசகர்கள் கண் முன் தோன்றி அந்தந்த அத்தியாயச் சுருக்கத்தை சொல்லும் வகையில் வடிவமைத்திருந்தேன். அது உலகிலேயே பதிப்பகத் துறையின் முதல் முயற்சி! அச்சு புத்தகத்தை Ai தொழில்நுட்பத்துடன் இணைத்து புதுமை படைத்தேன்.
நூல்களின் பெயர்:
அசத்தும் Ai – part-1
அசத்தும் Ai – part-2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்)
இரண்டு நூல்களையும் பெற விரும்புவோர் வாட்ஸ் அப்: 9444949921
உலகமெங்கும் எங்களைப் போல பலரும் Ai ஆராய்ச்சிகளை பல வருடங்களாக செய்து வருகிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஹிட்லரின் (1899-1945) காலத்திலேயே அவர் உலகம் முழுவதும் இருந்த போர் ஆயுதங்களை தன் இருப்பிடத்தில் இருந்தே இயக்கி போர் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போதே Ai கான தொடக்கப் புள்ளி போட்டாயிற்று.
அதன் பிறகு தொடர்ச்சியாக பலரும் பலவிதமாக செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இன்று Ai மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் வந்து சேர்ந்திருக்கிறது.
கைக்குக் கிடைத்த விளையாட்டு பொம்மையாய் Ai ஐ புகைப்படங்களை உரு மாற்றுவதற்கும், கேள்வி கேட்டு பதில் பெறவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
Ai சார்ந்த எந்த ஒரு சேவையாக / ஆப்பாக இருந்தாலும் அதனிடம் நான் கேட்கும் கேள்விகளும், நாம் கொடுக்கும் தகவல்களும், புகைப்படங்களும் வீடியோக்களும் Ai சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அதையும் அவர்கள் பகிரங்கமாக சொல்லித்தான் செயல்படுகிறார்கள்.
நாம் அனுமதி கொடுத்துத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் Ai குறித்த ஆராய்ச்சிகள் அனைத்தும் இன்னும் 100 சதவிகிதம் துல்லியமாக முழுமையடையவில்லை. 100 சதவிகித துல்லியத்தன்மைக்கு நம் மக்களின் எதிர்பார்ப்புகள் தகவல்களாக Ai க்குள் அப்லோட் செய்யப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தாங்களாகவே Ai ஐ புகைப்படத்துக்காகவோ, வீடியோவிற்காகவோ அல்லது இன்னபிற வசதிகளுக்காகவே பயன்படுத்தும்போது நாம் கொடுக்கும் தகவல்கள் Ai ன் பரிசோதனை பகுதிக்குள் தகவல்தளத்தில் சேகரிக்கப்பட்டுவிடும்.
அதை உணர்ந்து Ai ஐ பயன்படுத்துங்கள். வாழ்த்துகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
@Compcare K. Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
(Compcare Software)
ஏப்ரல் 10, 2025 | வியாழன்