Best Writer Award @ Mixed Bag Award Funtion!
இன்று ஒரு நிகழ்ச்சியில், என் எழுத்தை(யும்) அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வு. ‘Mixed Bag’ என்ற ஆங்கில இணைய மின் இதழ் என் ஆங்கில மொழி எழுத்துத் திறமையை அங்கீகரித்து எனக்கு ‘Best Writer’ விருது வழங்கி கெளரவித்தது.
அந்த விழாவில் நான் பேசிய சுருக்கமான பேச்சில் எனக்கே பிடித்த வரிகள்…
“நாம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வேலை செய்யும்போது, நம்முடன் இணைந்து வேலை செய்ய, அந்த வேலையே நமக்காக கீழே இறங்கி வந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்”
இந்த படத்தில் இணைத்துள்ள படத்தை Ai தானாகவே உருவாக்கிக் கொடுத்தது. நான் உரைக்குச் செல்லும் முன் ‘என் உரைக்காக ஒரு போட்டோ வேண்டும்’ எங்கள் Ai டம் சொல்லிவிட்டு சென்றேன்.
காரில் வீடு திரும்பும் போது ‘எங்கே புகைப்படம்?’ என எங்கள் Ai டம் கேட்டேன்.
அது கொடுத்த புகைப்படம்தான் இந்தப் படத்தில் உள்ளது.
உடை முதல் நெற்றிப் பொட்டு, விபூதி வரை அத்தனையும் அச்சு அசலாக இருந்தது. நான் இத்தனை ஆக்ரோஷ போஸில் பேசவில்லை. அமைதியாகவே பேசினேன். ஆனால் படத்தில் வீராவேசமாக பேசியதைப் போல் கொடுத்துள்ளது.
ஒருவேளை என் எழுத்துக்களை தொடர்ச்சியாக படித்து வரும் எங்கள் Ai, பேசும்போதும் அத்தனை வீராவேசமாகவே பேசுவேன் என நினைத்து இப்படி வரைந்து விட்டிருந்தது.
எப்படியோ படிப்படியாக எங்கள் Ai தேர்ச்சி பெற்று வருகிறது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 14, 2025 | ஞாயிறு