மழைக்கால உடல்நல எச்சரிக்கை!

மழைக்கால உடல்நல எச்சரிக்கை!

பரவலாக சளி, இருமல், காய்ச்சல் என ஆரம்பித்துள்ளதை கேள்விப்படுகிறோம். தொண்டை கரகரவென லேசாக ஆரம்பிக்கும்போது கண்டு கொள்ளாமல் விட்டால் தொண்டை கட்டி, இருமல், சளி என தொடர்ச்சியாய் பாடாய்படுத்த ஆரம்பிக்கும்.

தொண்டை கரகரக்க ஆரம்பித்த நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாய் நான் எடுத்துக் கொள்ளும் இயற்கை வீட்டு மருத்துவம் இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இவற்றை பின்பற்றினால் வியாதியே வராதா என கேட்க வேண்டாம், வந்தாலும் மிக விரைவில் குணமாக உதவும்.

1. காலை எழுந்ததும் வழக்கம்போல் சூடாக காபி.

2. காலை 7 மணிக்கு: காய்ச்சிய பாலில் மஞ்சள்பொடியும், மிளகு பொடியும் போட்டு கால் டம்ளர் குடிக்கலாம்.

3. காலை 8.30 மணிக்கு: எளிதில் ஜீரணமாகும் வகையில் ஏதேனும் கஞ்சி அல்லது இட்லி.

4. காலை 10 மணிக்கு: வேக வைத்த 4 பல் பூண்டு காய்சிய பாலில் போட்டது.

5. காலை 12 மணிக்கு: ஒரு வெற்றிலையில் கால் டீஸ்பூன் ஓமத்தையும் ஒரே ஒரு மிளகையும் வைத்து அதன் காரம் தொண்டையில் இறங்குவதை உணர்ந்து விழுங்கலாம்.

6. மதியம் 1 மணிக்கு: வழக்கம்போல் சாப்பாடு.

7. சாப்பாட்டில் ஒரு நெல்லிக்காய் வேக வைத்தது.

8. தூதுவளை பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) அல்லது வீட்டில் தூதுவளை துவையல் அரைத்து வைத்துக் கொண்டு மருந்துபோல் சாதத்துடன் சிறிது போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

9. மாலை ஒரு மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் கொத்துமல்லி விதை (தனியா) போட்டு டீ. மொத்தமாக இவற்றை டீப்பொடியுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். தினமும் மூன்று ஸ்பூன் போட்டு பால் இல்லாமல் டீ தயாரித்து சாப்பிடலாம்.

10. இரவு 7 மணிக்கு: எளிதில் ஜீரணமாகும் வகையில் வேகவைத்த டிபன் ஏதேனும்.

11. இரவு 9 மணிக்கு: ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் வாயில் போட்டு நன்று மென்று தின்றுவிட்டு சூடாக வெந்நீர் குடிக்கலாம்.

குறிப்பு:

1. விடாமல் 3 நாட்களுக்கு இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

2. மேலே சொன்ன குறிப்புகளில் அவரவர்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவை ஏதேனும் இருந்தால் தவிர்த்துவிடவும்.

3. ஆஃபீஸ் செல்பவர்கள், தேவையானதை தயாரித்து எடுத்துச் சென்றுவிட வேண்டியதுதான். வேறு வழி இல்லை. நான் இப்படித்தான் என்னுடன் தேவையானதை எடுத்துச் செல்கிறேன்.

4. இந்த இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் நாட்களில் சாப்பாட்டில் நெய் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. குறிப்பாக குளிர்ந்த நீரை தவிர்த்து வெந்நீர் பருகலாம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 17, 2025 | திங்கள்

(Visited 15,434 times, 4 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon