அகில இந்திய வானொலி AIR (Feb 5, 2018)

2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India Radio)…

‘கணினி துறையில் சாதனை படைத்த பெண்மணி’ என்ற கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட பேட்டியில் காம்கேரின் கடந்த 25 ஆண்டுகால சாதனைகளாக கேட்கப்பட்ட கேள்விகள், கமர்ஷியலாக மட்டும் இல்லாமல் சேவை மனப்பாங்குடன் கணினி துறைக்கு நான் ஆற்றிய பணிகள் குறித்து வெளிப்படுத்துவதாக அமைந்தது…

கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று,

உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம், அனிமேஷன் என பலநிலைகளில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை சேவை மனப்பாங்குடனேயே செய்து வந்த அனுபங்களை பகிர்ந்து கொள்ள அருமையான வாய்ப்பாக அமைந்தது.

சாஃப்ட்வேர் நிறுவனமாக இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் எடுத்து பிசினஸ் செய்யாமல் நம் நாட்டுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை மட்டும் தயாரிக்கத் தொடங்கி…

ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என பயந்து ஒதுங்கிய மக்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்த தமிழை அதில்  அறிமுகப்படுத்தி, கம்ப்யூட்டரை வாங்க உத்வேகம் கொடுத்து, பயன்படுத்த சுலபமாக்கி, நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்களை இலவசமாக கொடுத்து செயல்படுத்த வைத்து சாஃப்ட்வேர் துறையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததில் காம்கேருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

தொழில்நுட்பத் துறைக்கு ‘முதன் முதலில்..’ என சொல்லிக்கொள்ள காம்கேர் மூலம் நான் ஆற்றிய பணிகள்…

முதன்முதலில் தமிழையும், சாஃப்ட்வேரையும் இணைத்து சாஃப்ட்வேர் மற்றும் ஃபாண்ட் உருவாக்கத்துக்கு வித்திட்டு அதற்கான விருதையும் பெற்ற நிகழ்வு…

மளிகைக் கடை, மெடிகல்ஷாப் தொடங்கி வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வரை கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை பயன்படுத்த ஆர்வத்தை உண்டாக்க தமிழை அதில் அறிமுகப்படுத்தி பின்னர் நாங்கள் அவர்கள் தேவைக்காக தயாரித்திருக்கும் சாஃப்ட்வேர்களை இலவசமாகவே இன்ஸ்டால் செய்துகொடுத்து, அதை அவர்கள் பழகிய பிறகு அவர்கள் அதை பயன்படுத்த விரும்பினால் அதை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் நான் எடுத்த முயற்சிகள் மிக கடினமாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

முதன் முதலில், கம்ப்யூட்டர் கல்வியை தமிழில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது…

முதன் முதலில், தமிழில் கம்ப்யூட்டர் மொழிகளுக்கும், பேக்கேஜூகளுக்கும் புத்தகங்கள் எழுதத் தொடங்கியது…

முதன் முதலில், கம்ப்யூட்டர் மொழியில் புரோகிராம் எழுதி (C மொழியில்) அனிமேஷன் உருவாக்கி தமிழில் கருத்துப்படம் உருவாக்கியது…

முதன் முதலில் மிகக் குறைந்த விலையில் 99 ரூபாய்க்கு அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது…

100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 100-க்கும் அதிகமான மோட்டிவேஷன் கருத்தரங்குகள் என என் தொழில்நுட்ப அறிவையும், வாழ்வியல் கருத்துக்களையும்  பல்வேறு தளங்களில் சேவை மனப்பாங்குடன் பரப்பி வருவது…

12 வயதில் கதை கவிதை என எழுதத் தொடங்கி 25 வயதில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தொழில்நுட்பப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டதோடு அந்த வயதிலேயே நான் எழுதிய பல புத்தகங்கள் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பல்வேறு கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கும் அளவுக்கு ஆராய்ச்சி புத்தகம்போல எழுதுவதில் கைதேர்ந்த கலை குறித்து பல்வேறு பதிப்பாளர்களும், நூலகங்களும், பல்கலைக்கழகங்களும் குறிப்பாக வாசகர்கள் நற்சான்றிதழ் அளித்திருப்பதால் அந்த சேவை இறையருளால் இன்றளவும் தொடர்கிறது… சாஃப்ட்வேர், அனிமேஷன், குறும்படங்கள் என தொடங்கிய என் தொழில்நுட்பப் பயணம் இன்று APP தயாரிப்பில் உள்ளது. இவை அத்தனை மூலமும் நான் பெறும் தொழில்நுட்ப அறிவை புத்தகங்கள் வாயிலாக பதிவு செய்து வருவதையே பெரும் சாதனையாக கருதுகிறேன்.

இவை அனைத்தையும் நேர்காணலில் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த AIR-க்கு மனமார்ந்த நன்றி!

இப்படி தொழில்நுட்பத் துறைக்கு ‘முதன் முதலில்..’ என சொல்லிக்கொள்ள காம்கேர் மூலம் நான் ஆற்றிய பல பணிகளை நானே திரும்பிப் பார்க்கவும் தொகுக்கவும் இந்த நேர்காணல் வாய்ப்பாக அமைந்தது” – அந்த வகையில் இது 2018 ஆண்டில் முதல் நேர்காணலாகவும் அமைந்தது பெரும் சிறப்பு.

நன்றி AIR.

பிப்ரவரி 5, 2018

(Visited 115 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon