சென்னை மாவ நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ / மாணவியரும் மற்றும் பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
காம்கேர் பப்ளிகேஷன் வாயிலாக காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய Blog வடிவமைப்பது எப்படி? என்ற புத்தகத்தை ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களுக்கும் பயன்படும் வகையில் 320 நூல்களை அன்பளிப்பாக வழங்கினோம்.
அதுபோல காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பப்ளிக் லைப்ரரிக்கு 345 நூல்களை நன்கொடையாக வழங்கினோம்.
நூலகத் தந்தை டாக்டர் இராமாமிர்த அரங்கநாதன் பிறந்த நாள் வருடந்தோறும் ஆகஸ்ட் 12 ‘நூலகர் தினம்’ – ஆக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் (2015) தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், செங்கல்பட்டில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது.
அந்நிகழ்வில் என்னை சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள். மேலும் சென்ற வருடம்(2014) நான் எழுதி பதிப்பித்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் புத்தகங்களை எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் அந்நூலகத்துக்கு அன்பளிப்பாக அளித்ததை ஒட்டி எனக்கு Honour செய்ய இருப்பதாகவும் சொன்னார்கள்.
அன்று காம்கேரில் தவிர்க்க முடியாத சில அலுவலக நிகழ்வுகள் இருந்ததால் அவர்கள் அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ள இயலவில்லை.
நான் செய்த சிறிய செயலை மறக்காமல் மனதில் வைத்திருந்து சரியான சந்தர்பத்தில் என்னை கெளரவிக்க நினைத்து எனக்கு அழைப்பு விடுத்த திரு.கி.இராஜேந்தர் (மாவட்ட நூலக அலுவலகர், செங்கல்பட்டு) அவர்களின் நெஞ்சார்ந்த பண்பிற்கு நன்றி.
– காம்கேர் கே. புவனேஸ்வரி