ஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை

ஓலைச் சுவடியில் எழுதப்பட்டத் திருக்குறள், தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப, புத்தகங்களில் அச்சு வடிவிலும், ஒலி வடிவில் ஆடியோவாகவும், ஒலி-ஒளி வடிவில் மல்டிமீடியா அனிமேஷன்களாகவும், இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளாகவும் வளர்ந்து இன்று புதுமையான வடிவம் பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

எந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கின்ற மனிதனைச் சென்றடையும் போது தான் அது முழுமையான வெற்றி பெறும் என்பர். கூடவே நாம் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மாற்றுத்திறனாளியையும் சென்றடையும் போது தான் அந்த வெற்றி பூரணத்துவம் பெறும்.

இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரையும் சென்றடையும் விதத்தில், அவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் நோக்கத்தில், அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பார்வைகுறை உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டரில் ஜாஸ், என்.வி.டி.ஏ போன்ற சாஃப்ட்வேர்கள் திரையை படித்துக் காட்ட(Screen Reading Software) உதவுகின்றன. இன்று ஏராளமான பார்வைகுறை உள்ளவர்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்கிறார்கள், சாஃப்ட்வேர் துறை, கால் சென்டர், பி.பீ.ஓ, ஆடியோ ரெகார்டிங் போன்று எல்லா துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

அந்த உண்மையை பறைசாற்றும் நிகழ்ச்சி தான் ‘திருக்குறள் ஒலி ஓவியம்’ என்ற இந்நிகழ்ச்சி. சென்னை  மாநிலக் கல்லூரி தமிழ்த்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறள் வழிக் கல்வித் திட்டதுக்காக பார்வையற்றோருக்கான சிறப்புப் பயிலரங்கம் 08-03-2012, வியாழன் அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக காம்கேர் கே.புவனேஸ்வரி,  காம்கேர் (Compcare) நிறுவனத்தில் தயாரித்த திருக்குறள் சம்பந்தப்பட்ட ஆடியோ சிடி/டிவிடி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் மூலம்  ஆடியோ ரெகார்டிங் பற்றி விரிவாக செயல்முறை விளக்கம் செய்துகாட்டினார்.

Sound Recorder என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி ஆடியோவை பதிவாக்கும் போது, அது ஒரே ஒரு ட்ரேக்கில்(Track) மட்டுமே பதிவாகும். அதில் மற்றொரு ட்ரேக்கைப் பயன்படுத்த முடியாது. உதாரணத்துக்கு, நாம் பேசியதை ரெகார்ட் செய்து விட்டு, அதன் பின்னணியில் மெல்லிய இசையை தவழ விட விரும்பினால், சவுண்ட் ரெகார்டர் சாஃப்ட்வேரில் அவ்வாறு செய்ய முடியாது. அதற்கு Audacity, Cake Walk போன்ற சாஃப்ட்வேர்களையே பயன்படுத்த வேண்டும்.

அடாசிடி என்ற சாஃப்ட்வேரை http://audacity.sourceforge.net/ என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இன்டர்நெட்டில் உள்ளது.

இதன் மூலம் ஆடியோவை ரெகார்ட் செய்யும் போது, நாம் பேசுவதை தனி ட்ராக்கிலும், பின்னணி இசையை தனி ட்ராக்கிலும் பதிவாக்கிக் கொள்ளலாம். இதுபோல எத்தனை ட்ராக்குகள் வேண்டுமானாலும் இணைத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

அடாசிடி, கேக் வாக் போன்ற சாஃப்ட்வேர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ராக்குகளை பயன்படுத்த முடியும். எனவே, முழுமையான ஆடியோ ரெக்கார்டிங்கை நம் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரிலேயே செய்து முடிக்க இதுபோன்ற சாஃப்ட்வேர்கள் உதவுகின்றன.

இவை அத்தனையும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் விரிவாக கற்றுத்தரப்பட்டு அவர்கள் குரலில் அவர்களே திருக்குறளை ஆடியோ ரெட்கார்ட் செய்து மகிழ்ந்தார்கள்.

மீடியா செய்திகள்

(Visited 220 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon