ஸ்ரீபத்மகிருஷ் 2013 – Trust With Kids

2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவில் வசித்து வரும் என் சகோதரியின் பெண் அக்‌ஷயாஸ்ரீயின் பிறந்த நாளை, அவ்வை இல்லத்து 30 பெண் குழந்தைகளுடன்  Trust with Kids என்ற சிறப்பு நிகழ்ச்சியாக குரோம்பேட்டை பாலாஜி பவன் கான்ஃபரன்ஸ் ஹாலில் கொண்டாடினோம்.

 

அதாவது, முப்பது குழந்தைகளும் 30 தீபங்களை ஏற்றி வர, இறுதியில் என் சகோதரியின் பெண் 31-வது தீபத்தை ஏற்ற, அன்று 31 குழந்தைகளுக்கும் பிறந்த நாள் விழாவாக குழந்தைகள் அனைவரையும் களிப்பூட்டும் நிகழ்ச்சி தான் அன்றைய தின ஹைலைட்.

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் Managing Trustee, காம்கேர் புவனேஸ்வரி அறிமுக உரையை நிகழ்த்தித் தொடங்கி வைக்கிறார்.

 

 

சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவை(பதிவு) நிர்வாகிகளான கலைமாமணி வானொலி அண்ணா  கூத்தபிரான், President, பெரம்பூர் புலவர் பாலகிருஷ்ணன், Secretary, சிறுகளத்தூர் எஸ்.ஏ. பலராமன், Joint Secretary, நாமக்கல் ராஜா, Correspondent இவர்கள் அவ்வை இல்லக் குழந்தைகளுக்கு சிறப்புக் கலைநிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் ஆன் – ஸ்பாட்டில் குழந்தைகளை பாட வைப்பது, குவிஸ்ஸில் கலந்து கொள்ளச் செய்வது, மகான்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலைமாமணி வானொலி அண்ணா கூத்தபிரான் அவர்கள் குழந்தைகளுக்காக ஸ்பாட் ப்ளே எனப்படுகின்ற நாடக நிகழ்ச்சியை நடத்தி நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்.

 

 

இறுதியில் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசளிக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்சுவை விருந்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

 

 

 

 

மீடியா செய்திகள்

இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து  ‘விஜயபாரதம்’   வார இதழில் நான் எழுதி வந்த கட்டுரைத் தொடரில் எழுதிய கட்டுரை பின்னர் சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வாயிலாக ‘மனதை FORMAT செய்யுங்கள்’ என்ற புத்தகத்திலும் இடம்பெற்றது.

 

(Visited 81 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon