ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்

 

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை  ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது.

ஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான் இவர்களுக்காக தேர்வு எழுத உதவி வந்தார்கள். இன்று அவர்கள் அனைவரும் உதவி செய்ய வர முடியாத அளவுக்கு வயதானவர்களாகி விட்டார்கள்.

இன்றைய இளம் தலைமுறை பெண்கள் அனைவருமே வேலைக்குச் செல்கிறார்கள். மேலும் இப்படி உதவி செய்வதற்கு பணம் எதிர்பார்க்கிறார்கள். தவிர, எழுத்துபிழை இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதவும், தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதவும் தெரிவதில்லை. எழுதும் பழக்கமே குறைந்து, எல்லாமே இணையமயமாகிப் போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில், வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை எழுதி முடிக்க முடிவதில்லை.

இதன் காரணமாய் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள். பரிட்சை எழுத வரும் ஸ்க்ரைப்களில் ஒருசிலர் அவர்கள் மீது பாவப்பட்டு நன்றாகப் படிக்காத மாணவர்களுக்கு நல்ல முறையில் பரிட்சை எழுதித் தந்து அவர்கள் முதலாவதாக வர உதவுகிறார்கள். நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்கு சுமாரான அறிவுள்ள ஸ்க்ரைப்கள் வந்து அவர்கள் தேர்வில் தோல்வி ஆவதற்குக் கூட காரணமாகிறார்கள்.

ஒரே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ஸ்க்ரைபாக வந்து உதவும்போது, தேர்வு முடிந்த பிறகு மற்ற மாணவர்களிடம் அவர்களைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள். இதன் காரணமாய் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இந்தப் பிரச்சனைகளை போக்குவதற்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் தங்கள் பள்ளி/கல்லூரி தேர்வுகளை எழுதி சுயமாக வாழ்வதற்கும் உதவி செய்யும் வகையில்,  காம்கேர் நிறுவனம்  ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exams)  என்ற சாஃப்ட்வேரை உருவாக்கியுள்ளது (Copy Right @ Compcare Software Pvt Ltd.,)  இதன்   பீட்டா வெர்ஷன் (Beta Version) வெளியிடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சாஃப்ட்வேர் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் அவர்களே தங்கள் தேர்வை எழுத முடியும்.  இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதும் வகையில் வடிவக்கப்பட்டுள்ளது.

இந்த சாஃப்ட்வேர் குறித்த கருத்தரங்கம் மார்ச் 3, 2017  சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக இந்த சாஃப்ட்வேர் குறித்த விரிவான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மீடியா செய்திகள்

(Visited 209 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon