ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு வாழ்த்துரைகளுடன் தொடங்கினோம்.
இந்த அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்கும் உதவுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
வருடந்தோறும் பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்
என ஒவ்வொரு பிரிவில் இருந்தும் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ் விருது’ கொடுத்து கெளரவிக்கிறோம்.
இதற்காகவே வருடந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, அதை ஸ்ரீபத்மகிருஷ் விருது வழங்கும் நிகழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ச்சியை விதைத்து சந்தோஷத்தை அறுவடை செய்கிறோம்.
வருடாந்திர நிகழ்வுகள் Since 2007
2018- பொங்கல் கொண்டாட்டம் With உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் குழந்தைகள் மற்றும் பாட்டிகளுடன்…
2016- அம்மா, என்னை பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரி உணர்வில் இருந்தாய்?
2015- நூலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடை
2014- திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்
2012- திருக்குறள் ஒலி ஓவியம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பயிலரங்கம்
2010- விவேகானந்தர் பிறந்த நாள் விழா
2008- எங்கள் வீட்டுக் குழந்தைகள் தினம்