மயிலையில் என் முதல் ஆன்மிக சொற்பொழிவு (2010)

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழா நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான காம்கேர்.கே.புவனேஸ்வரி அவர்கள் முதல் திருமுறையை, பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றித் தொடங்கி வைத்தார்.

சாஃப்ட்வேர் துறை,மல்டிமீடியா துறை,எழுத்துத் துறை மற்றும் குறும்படம் தயாரிக்கும் துறை போன்று பல்வேறு துறைகளில் அனுபவம் உள்ள இவர் ஆன்மிகத்தை, கம்ப்யூட்டரோடு இணைத்து, பல்வேறு தயாரிப்புகளை குறும்படங்கள்,கட்டுரைகள் போன்ற வடிவங்களில் தயாரித்திருக்கிறார்.

முதல் திருமுறையைப் பற்றியும்,திருமுறை ஆசிரியர் திருஞானசம்பந்தர் பற்றியும் மல்டிமீடியா அனிமேஷன் மற்றும் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் நேற்று மிகச் சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார். ஆன்மிகச் சொற்பொழிவில் வித்தியாசமான முறையைக் கையாண்டார். உரையின் சாராம்சத்துக்கு Click Here…

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.கஸ்தூரிபாய் சிறுவர் சங்கத்தின் செயலாளர் திரு.கே.எஸ்.சங்கர் அவரது சங்கத்தின் குழந்தைகளை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்து நிகழ்ச்சிக்குப் புத்துணர்வு கொடுத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில், கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் காம்கேர் சாஃப்ட்வேரின் அனிமேஷனில் உருவான கந்தர் சஷ்டி கவசம் மல்டிமீடியா ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

– பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்

மீடியா செய்திகள்

(Visited 113 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari