#கதை: சாவியில்… ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 14, 1990)

சரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க்.

நான் கல்லூரியில் M.Sc. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிப்பதற்குள் கோகுலம், கலைமகள், விஜயபாரதம், சாவி, பாக்யா, தினமலர், ராணி, ராஜம், நாரதர், சுபமங்களா என பல்வேறு பத்திரிகைகளில் கதை கவிதை கட்டுரை என எழுதி இருக்கிறேன். அவை எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியுள்ளன.

அவற்றில் பல படைப்புகள் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளன.

அவற்றைத் தொகுத்து புத்தகமாக்கினால் என்ன எனத் தோன்றியதால் நான் பத்திரமாக பைண்டிங் செய்து வைத்திருந்த படைப்புகளை எடுத்து படித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாத சிறுகதைப் போட்டியில் சாவியில் நான் எழுதிய ‘நியதிகள் மாறலாம்’ சிறுகதை ரூபாய் 250 பரிசு பெற்றிருந்ததாக காட்டியது.

எல்லா படைப்புகளும் அந்தந்த காலகட்டதின் கண்ணாடியாக இருக்கின்றன என்பதை அந்த கதையை படித்தபோது உணர முடிந்தது.

இந்தக் கதையில் உள்ளதைப் போன்ற நிலை இன்று பெருவாரியாக குறைந்துவிட்டாலும் இன்னும் சில இடங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த ஸ்கேன் காப்பியில் என் பெயரையும், M.Sc படித்துக்கொண்டிருந்ததால் அடைப்புக்குறிக்குள் (M.Sc.,) எனவும் போட்டு சீல் வைத்திருப்பேன். (பார்க்கவும்)

இதுப்போல எனக்கும் என் சகோத சகோதரிக்கும் எங்கள் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்ப வசதியாக முகவரியுடன் ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்து ஊக்கப்படுத்திய என் பெற்றோரின் செயல்பாட்டை இன்று நினைக்கும் போதும் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

இதே அக்கறையைத்தான் தொடக்கத்தில் இருந்து இன்று வரை எங்கள் மீது காண்பித்து வருகிறார்கள் என் பெற்றோர்.

அன்று என் படைப்புகளை அனுப்ப ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்து என் பெற்றோர் ஊக்கப்படுத்தியதால்தான் (இதுபோல குட்டி குட்டியாய் எத்தனை ஊக்கப்படுத்தல்கள்… பட்டியல் போட பக்கங்கள் போதாது) இன்று காம்கேர் என்ற நிறுவனத்தையே உருவாக்க முடிந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பெற்றோரின் சின்ன சின்ன செயல்பாடுகளும் பிற்காலத்தில் மிகப் பெரிய புரட்சிக்கே வித்திடும் என்பது என் விஷயத்தில் நிரூபணம் ஆன உண்மை.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் திறமையை போற்றுங்கள்… நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அவர்கள் உயர்ந்து உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

இதுபோன்ற ஒரு அக்டோபர் மாதத்தில் 1990-ம் ஆண்டு என் படைப்பை அங்கீகரித்து பரிசும் கொடுத்த சாவி இதழுக்கு நன்றி. அந்த படைப்பு உங்கள் பார்வைக்கு. நேரம் இருப்பவர்கள் படித்துப் பார்க்கலாம்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 20, 2018

14-11-1990 ம் ஆண்டு சாவி இதழில்
‘வெளியான நியதிகள் மாறலாம்’ 
அக்டோபர் மாத சிறுகதைப் போட்டியில் ரூபாய் 250 பரிசு பெற்றது

 

(Visited 920 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon