கூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது? (தினமலர்: பிப் 13, 2019 & குங்குமச் சிமிழ்: மார்ச் 1-15, 2019)

2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில்,  புதிதாக கூகுள்+ அக்கவுண்ட் புரொஃபைல் (Account Profile), கூகுள்+ பக்கங்கள் (Google pages), கூகுள்+  நிகழ்வுகளை (Google Events)  போன்றவற்றை இனி யாரும் உருவாக்க முடியாது.

2019 ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பாக பயனாளர்கள் தங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்ட்டில் உள்ள தகவல்களை டவுன்லோட் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜிமெயில் (Gmail), கூகுள் போட்டோஸ் (Google Photos) மற்றும் கூகுள் டிரைவ் (Google Drive) போன்ற சர்வீஸ்களில் எந்த பாதிப்பும் இருக்காது.

இது சம்மந்தமாக கூகுள் வெப்சைட்டின் சப்போர்ட் டிவிஷனில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை கேள்வி பதில் வடிவில் கொடுத்துள்ளேன். (Reference: https://support.google.com/plus/answer/9217723)

பயனாளர்கள் வெர்ஷன் கூகுள்+ மூடப்படுவது ஏன்?

பயனாளர்கள் வெர்ஷன் கூகுள்+ (Consumer Version) மற்றும் அது சார்ந்த API (Application Program Interface) அனைத்தும் 2019 ஏப்ரல் 2-ம் தேதி முழுமையாக மூடப்படும்.

கூகுளின் புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டின்போது சிறிய தொழில்நுட்பப் பிரச்சனையால், 52.5 மில்லியன் பயனாளர்கள்  பாதிப்புக்குள்ளாயினர்.

பயனார்களின் தகவல்கள் பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிரமான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்புக் கருதி விரைவில் கூகுள்+ அப்ளிகேஷன் நிறுத்தப்பட உள்ளது. கூகுள்+ மூடப்படுவதற்கு இது முதன்மைக் காரணம்.

Google+ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையை மற்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்பதும் கூகுள்+ மூடப்படுவதற்கு மற்றொரு காரணம்.

இனி கூகுள்+ வர்த்தகத்துக்கும் வியாபாரத்துக்கும் பயன்படும் வகையில் நிறுவன வாடிக்கையாளர்களுக்காக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு  ‘நிறுவன வெர்ஷனாக’ (Enterprise Version) வெளியிடப்படும்.

(Reference: https://www.blog.google/technology/safety-security/expediting-changes-google-plus/)

இதுவரை கூகுள்+ மூலம் பின் தொடர்பவர்களுடன் (Followers) தொடர்பில் இருப்பது எப்படி?

கூகுள்+ பயனாளர்களை பின்தொடர்பவர்கள் கூகுள்+ தொடர்பைத் தாண்டி அவர்களுடன் எங்கெல்லாம் தொடர்பில் இருக்கிறார்களோ அவற்றின்மூலம் தொடர்பில் இருக்கலாம்.

இதற்காகவே ஒவ்வொரு கூகுள்+ பயனாளர்களும் தங்கள் வெப்சைட், பிளாக், மற்ற சமூக வளைதல முகவரிகளைப் பட்டியலிட்டு அவற்றின் மூலம் இனி தொடர்பில் இருக்கலாம் என்ற பதிவை வெளியிடலாம்.

கூகுள்+ அக்கவுண்ட்டில் உள்ள தகவல்கள் என்ன ஆகும்?

கூகுள்+ அக்கவுண்ட்டில் ஆல்பத்தில் பதிவுசெய்து வைத்துள்ள புகைப்படங்கள் வீடியோக்கள் (Photos & Videos from Google+ in user’s Album Archieve) உட்பட கூகுள்+ பக்கங்களும் (Google+ Pages) நீக்கப்பட்டுவிடும்.

இவற்றை 2019 ஏப்ரல்-2ம் தேதிக்குள் டவுன்லோட் செய்து சேவ் செய்துகொள்ளலாம்.

கூகுள் போட்டோவில் (Google Photos) பதிவுசெய்து வைத்துள்ள புகைப்படங்களும் வீடியோக்கள் நீக்கப்படமாட்டாது.

கூகுள்+ அக்கவுண்ட்டில் உள்ள தகவல்கள் நீக்கப்படாமல் இருக்குமா…. அப்படி இருந்தால் என்ன காரணம்?

சட்டப் பூர்வமான நடவடிக்கைகளுக்காக அல்லது அரசாங்கத்தின் கோரிக்கைக்களுக்கு கட்டுப்பட்டு  சில பயனாளர்களின் கூகுள்+ அக்கவுண்ட் தகவல்கள் முழுமையாகவோ அல்லது அதன் சில பகுதிகளோ  நீக்கப்படாமல் இருக்கலாம்.

கூகுள்+ அக்கவுண்ட் நீக்கப்பட எத்தனை காலம் எடுத்துக்கொள்ளப்படும்?

பயனாளர்களின் கூகுள்+ அக்கவுண்ட் (Google+ Account), கூகுள்+ பக்கங்கள் (Google+ Pages)மற்றும் ஆல்பம் தொகுப்புகள் (Album Archieve) போன்றவை முழுமையாக நீக்கப்பட சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படும். அதுவரை அந்தத் தகவல்களை பார்வையிடவும், பயன்படுத்தவும் முடியும்

கூகுள்+ அக்கவுண்ட் மூடப்பட்டால் மற்ற கூகுள்+ சர்வீஸ்கள் பாதிக்கப்படுமா?

பயனாளட்களின் கூகுள்+ அக்கவுண்ட் மூடப்பட்டால்,  கூகுளின் மற்ற சர்வீஸ்கள் பாதிக்கப்படாது. உதாரணத்துக்கு ஜிமெயில் (Gmail), கூகுள் போட்டோஸ் (Google Photos) மற்றும் கூகுள் டிரைவ் (Google Drive) போன்ற சர்வீஸ்களில் எந்த பாதிப்பும் இருக்காது.

கூகுள்+ அக்கவுண்ட் விவரங்களை எப்படி டவுன்லோட் செய்வது? 

  1. உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து Sign-In செய்துக்கொள்ளுங்கள்.
  1. https://support.google.com/plus/answer/1045788 இந்த லிங்கில் நுழையவும்.

  1. இப்போது கிடைக்கும் Download Specific Google+ Data என்ற தலைப்பிலான திரையில் Download your Data என்ற விவரத்தை கிளிக் செய்யவும்.

  1. இப்போது கிடைக்கும் Download your data என்ற தலைப்பிலான திரையில் Google+1 for Websites, Google Communities, Google Circles போன்ற கூகுள்+ பிராடக்ட்டுகள் வெளிப்படுவதைக் காணலாம். இதில் Show More Products என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

  1. இப்போது கூகுள்+ தொடர்பான அத்தனையையும் பெறலாம்.

இதில் எந்தெந்த விவரங்களில் உள்ள தகவல்களை டவுன்லோட் செய்ய வேண்டுமோ அவற்றுக்கு அருகில் உள்ள On/Off ஐகானை கிளிக் செய்து ஆன் செய்துகொள்ளலாம். உடனடியாக அது நீல கலரில் மாற்றமடையும்.

உதாரணத்துக்கு இங்கு Youtube என்ற விவரத்தை ON செய்துள்ளதால் அது கலர் மாற்றமடைந்துள்ளது.

பிறகு Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

 

  1. உடனடியாக நாம் தேர்ந்தெடுத்துள்ள google+ விவரங்கள் டவுன்லோட் ஆக தயாராகிவிடும். இப்போது Customize Archive Format என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும்.

அதில் File Type என்ற இடத்தில் .ZIP என்பதும்,

Archive Size என்ற இடத்தில் 2GB என்பதும்,

Delivery Method என்ற இடத்தில் Send Download Link Via Email என்பதும் தேர்வாகி இருக்கும்.

இதன் அருகில் உள்ள அம்புக்குறியீட்டை கிளிக் செய்தால் அதில் Add to Drive, Add to DropBox, Add to Onedrive, Add to Box என நான்கு விவரங்கள் கிடைக்கும்.

இவற்றில் தொகுக்கப்பட்ட தகவல்கள் இமெயிலுக்கு வந்தால் நம் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் Send Download Link Via Email என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

Create Archive என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

  1. இப்போது Download your Data என்ற திரையில் Almost There என்ற தலைப்பின்கீழ் ‘டவுன்லோட் செய்ய எல்லா தகவல்களும் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முடிவடைந்ததும் தகவல் இமெயிலுக்கு அனுப்பப்படும்’ என உறுதி அளிக்கும் தகவல் வெளிப்படும்.

  1. நம்முடைய தகவல்களின் அளவுக்கு ஏற்ப நம்முடைய Google+ தகவல்கள் டவுன்லோட் ஆகி இமெயில் வந்தடையும் நேரமும் வேறுபடும். ‘Your Account, Your Data’ என்ற தலைப்பில் இமெயிலில் கிடைக்கும். அதில் Download Archive என்ற பட்டனை கிளிக் செய்தால் Google+ ல் தொகுக்கப்பட்ட நம் தகவல்கள் நம் கம்ப்யூட்டரில் டவுன்லோட் ஆகும். அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

Compcare Software Private Limited

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க…  http://compcarebhuvaneswari.com/?p=3589

மீடியா செய்தி – தினமலர் – பிப்ரவரி 13, 2019

தினமலர் – பிப்ரவரி 13, 2019 வேலூர், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு மற்றும் சேலம் எடிஷன்களில்

‘Google+ Shutdown’ குறித்து நான் எழுதிய கட்டுரை!

தினமலர் செய்தித்தாளில் படிக்க… Dinamalar FEB 13 2019

மீடியா செய்தி – குங்குமச் சிமிழ் – மார்ச் 1-15, 2019  Kunkuma Chimizh Magazine March 1-15 2019

 

(Visited 609 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon