ஆண்கள் வெட்கப்பட வேண்டும்!

ஆண்கள் வெட்கப்பட வேண்டும்!

இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையை…

ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ‘மனதை Format செய்யுங்கள்’ என்ற சுயமுன்னேற்ற புத்தகத்தில் எழுதியிருந்தேன்.

சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, மது அருந்திய இளைஞர்கள் 4 பேர் அமர்ந்து போதையில் பிதற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே, ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது. போதையில் அந்த இளைஞர்கள் தாயின் உடலோடு உடலாய் ஒட்டிக் கொண்டு படுத்திருந்த நாய் குட்டிகளை சீண்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவன் ஒரு குட்டி நாயின் மீது கல்லைவிட்டு எறிய, தாய் நாய்க்கு வந்ததே கோபம்…ஆக்ரோஷமாய் குரைத்து, பாய்ந்து பயம்காட்டி, வெறியில் அங்கும் இங்கும் ஓடி அவர்களை கொலை வெறியில் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது.

போதை கண்களை மறைக்க, அந்த இளைஞர்-களுக்கு அந்த தாய் நாய் மீது வந்ததே கோபம்…

அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து அந்த குட்டி நாய்கள் மீது வேகமாக அடித்தார்கள். ஆளுக்கு 2 நாய்க்-குட்டிகள் என 8 நாய்களையும் அடித்தே கொன்று விட்டார்கள்.

அந்தத் தாய் நாய் மீதும் தொடர்ந்து கல்லடிக் கொடுத்து விரட்டியபடியே இருந்திருக்கிறார்கள். தாய் நாய் எவ்வளவு போராடியும் தன் குட்டிகளைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த செய்தியை இறந்த எட்டு குட்டிநாய்களும் வரிசையாய் படுத்திருக்க, தாய் நாய் ஏக்கத்தோடு அவற்றைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தார்கள். அது மிகவும் பரிதாபமாக உள்ளத்தை உருக்கும் காட்சியாக இருந்தது.

நாயாக இருந்தாலும், போதையில் அந்த இளைஞர்களுக்கு அந்தத் தாய்நாயைப் பார்க்கும் போது பெண்நாயாக மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது. அதனால் தான் அதைப் பழிவாங்கும் எண்ணத்தில் பிறந்து சிலமணி நேரங்களே ஆகியிருந்த பிஞ்சு நாய்க்குட்டிகளை கொன்று வெறியை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பதிவு ஆண்களை குறை சொல்லவோ புண்படுத்தவோ அல்ல…

எப்போதெல்லாம் ஏதேனும் ஒரு போதையில் ஆண்களால் பெண்கள் சிதைக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் எனக்குள் தோன்றும் உணர்வின் பிரதிபலிப்பு இது.

பெண் பிள்ளைகள் வளர்ப்பைப் போலவே ஆண் பிள்ளைகளையும் பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 12, 2019

(Visited 60 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon