ஒருசிலர் பல ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். Fake ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகளை உருவாக்குவது என்பது அவர்கள் நோக்கமாக இருக்காது.
மொபைல் போனில் ஃபேஸ்புக் ஆப்பில் தனி அக்கவுண்ட், டெஸ்க்டாப் / லேப்டாப்பில் பயன்படுத்த தனி ஃபேஸ்புக் அக்கவுண்ட் என வைத்திருப்பார்கள்.
இப்படி ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுகளை வைத்திருப்பது அவர்களின் நம்பகத்தன்மையை பல நேரங்களில் இழக்க நேரிடும்.
எனவே ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை வைத்துக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ வைத்திருக்கும் மற்ற அக்கவுண்ட்டுகளை நீக்கிக்கொண்டு விடலாம்.
—-****—-
De-Activate Vs Delete Facebook Account
ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை டி-ஆக்டிவேட் செய்வதற்கும், முழுமையாக டெலிட் செய்வதற்குமான வித்தியாசம்…
டி-ஆக்டிவேட் என்பது… நாம் அலுவலகத்தில் தற்காலிகமாக விடுப்பு எடுத்துக்கொள்வதைப் போல கருதலாம்.
டெலிட் என்பது… நாம் பணி செய்துகொண்டிருக்கும் அலுவலகத்தில் இருந்து ரிசைன் செய்துவிட்டு வெளியேறுவதைப் போல கருதலாம்.
—-****—-
ஃபேஸ்புக் பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்வது எப்படி?
உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். எப்போது வேண்டுமோ அப்போது ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் ஃபேஸ்புக் ஐடியை யாரும் சர்ச் செய்து தேடிபார்க்க முடியாது.
- உங்கள் ஃபேஸ்புக் பேஜின் வலது மூலையில் உள்ள அக்கவுண்ட்ஸ் மெனுவின் அம்புக்குறியீட்டை கிளிக் செய்யவும். அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- இப்போது வெளிப்படும் General Accounts Settings என்ற தலைப்பிலான விண்டோவில் Manage Account என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது வெளிப்படும் விண்டோவில் Deactivate Your Account என்ற விவரத்தை கிளிக் செய்தால் வெளிப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் ஆகிவிடும்.
டி-ஆக்டிவேட் ஆன ஃபேஸ்புக் பக்கத்தை ஆக்டிவேட் செய்யும் முறை
எப்போது ஆக்டிவேட் செய்ய வேண்டுமோ அப்போது உங்கள் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து வழக்கம்போல லாகின் செய்தால் ஆக்டிவேட் ஆகிவிடும்.
—-****—-
ஃபேஸ்புக் பக்கத்தை டெலிட் செய்வது எப்படி?
https://www.facebook.com/help/delete_account – இந்த லிங்கின் வழியாக உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை முழுமையாக நீக்கிக்கொள்ளலாம்.
முற்றிலும் நீக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை திரும்ப பெற இயலாது. எனவே கவனம் வேண்டும்.
—-****—-
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 20, 2019