உங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது…

நீங்கள் பிளாக் – Blog வைத்துள்ளீர்களா?   அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா?

அப்போ மேலே படியுங்கள்…

கூகுள்+ மூடப்பட உள்ளதால் பிளாகுகளும் செயலிழந்துபோகும் என்பதுபோன்ற சரியாகப் புரிந்துகொள்ளப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் படிக்க நேர்ந்தது.

கூகுள்+ மட்டுமே மூடப்படுகிறது. இதுகுறித்த  குங்குமச் சிமிழ் மற்றும் தினமலரிலும் நான் எழுதியுள்ள விரிவான கட்டுரைகள் இந்த லிங்கில் உள்ளது. எனது வெப்சைட் லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=3577

பிளாகில் நீங்கள் Google+ Widgets, +1 Button, Google+ Comments, Google+ Profile போன்ற விவரங்களை பயன்படுத்தி இருந்தால் அவை மட்டும் செயலிழக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விவரம் இந்த லிங்கில் (https://productforums.google.com/forum/#!topic/blogger/gKc_0HEWWV4)

Blogger.com மூலம் நீங்கள் உருவாக்கியுள்ள பிளாகுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே கவலை இல்லாமல் பிளாகைப் பயன்படுத்தலாம்.

பிளாகை  ‘பேக் அப்’  எடுக்கும் முறை

ஆனாலும் மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ, உங்கள் பிளாகை அவ்வப்பொழுது  ‘பேக் அப்’ எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

உங்கள் பிளாகிலேயே அதற்கான வசதிகள் உள்ளன. Settings > Other >Import & Backup > Backup Content

இந்த வழிமுறைகளின்படி உங்கள் கம்ப்யூட்டரில் உங்கள் பிளாகை பேக் அப் எடுக்கும்போது அவை XML ஃபைலாக பதிவாகும். அதை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு காரணத்தால் உங்கள் பிளாகில் உள்ள தகவல்கள் தொலைந்துபோனாலோ அல்லது Corrupt ஆனாலோ இந்த XML ஃபைலை மீண்டும் இதே வழிமுறைகளின் படி Settings > Other >Import & Backup > Import Content  வழியாக உங்கள் பிளாகில் அப்டேட் செய்து கொள்ள முடியும்.

Back Up Content – க்கும், Import Contenet – க்கும் உள்ள வேறுபாடு?

Backup Content – என்பது உங்கள் பிளாகை உங்கள் கம்ப்யூட்டரில் பேக் அப் செய்துகொள்ளப் பயன்படுகிறது.

Import Content – என்பது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் பிளாகை அப்டேட் செய்துகொள்ள உதவுகிறது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

மார்ச் 21, 2019

 

(Visited 273 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon