டெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை!

யுடியூபில் கேமிரா மூலம் ஷூட் செய்யப்பட்ட வீடியோக்கள், அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், இமேஜ் ஃபைல்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் என பலவகைப்பட்ட வீடியோ ஃபைல்களைப் பார்த்திருப்போம். அவற்றில் பல பவர்பாயின்ட் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஃபைல்கள் என்றால் நம்ப முடிகிறதா? இப்போது பவர்பாயின்ட் மூலம் வீடியோ ஃபைலை உருவாக்கும் முறையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

  1. தேவையான பிரசன்டேஷன் ஃபைலைத் திறந்துகொள்ள வேண்டும். File என்ற மெனுவில் Export என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில் Create a Video  என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

  1. உடனடியாக Create a Video என்ற தலைப்பிலான விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Create a Video என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

  1. இப்போது Save As என்ற தலைப்பிலான விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் File Name என்ற இடத்தில் ஃபைலின் பெயரை டைப் செய்துகொண்டு, Save என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு இங்கு, Sample Video என்று ஃபைலின் பெயரை கொடுத்துக்கொண்டுள்ளோம்.

  1. உடனடியாக பவர்பாயின்ட் பிரசன்டேஷன் வீடியோ ஃபைலாக மாற்றமடையத் தொடங்கும். பிரசன்டேஷனில் உள்ள ஸ்லைடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடியோவாக மாற்றமடைய எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் மாறுபடும். நம் பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை எந்த ஃபோல்டரில் சேவ் செய்துவைத்திருக்கிறோமோ, அதே ஃபோல்டரில்தான் வீடியோ ஃபைலும் பதிவாகும். இங்கு Sample Video என்று நாம் கொடுத்துக்கொண்ட பெயரில் வீடியோ ஃபைல் பதிவாகியிருப்பதைக் கவனிக்கவும்.

  1. இந்த ஃபைலை கிளிக் செய்தால், அது விண்டோஸ் மீடியா பிளேயர் என்ற சாஃப்ட்வேரில் இயங்கத் தொடங்கும்.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூலை 2, 2019

DISCLAIMER

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டுகள் மற்றும் சாஃப்ட்வேர்களின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேர்கள், வெப்சைட்டுகள், நிறுவனங்களின் பெயர்கள், அவற்றின் தயாரிப்புகள், புகைப்படங்கள், லோகோ மற்றும் காப்புரிமை ஆகிய அனைத்தும் அந்தந்த நிறுவனங்களுக்கே உரிமையுடையது.

அதேபோன்று  இந்தக் கட்டுரையை நீங்கள்  படிக்கும்போது, வெப்சைட்டுகள் மற்றும் சாஃப்ட்வேரின் வடிவமைப்பில் அவர்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால், அதற்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

(Visited 101 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon