அக்டோபர் 11. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.
2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் (United Nations) இந்த நாளை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது. இந்த தினத்தில் பெண் குழந்தைகளின் நலனை பேணிக்காக்கவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கவும் மேம்படவும் பல்வேறு துறைசார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு வீடியோ எடுத்து www.thereviewclip.com வெப்சைட்டில் அப்லேட் செய்திருந்தார்கள். இதில் என்னிடமும் கருத்துக் கேட்டிருந்தார்கள்.
என் கருத்துக்கள் அடங்கிய வீடியோ லிங்க்: https://www.thereviewclip.com/review/International_Day_of_the_GIRL/2zqjMNxc
வீடியோவில் நான் பேசியதன் சாராம்சம்:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதைப்போல வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் அங்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிரம்பி வழியும் என்பது அனுபவப்பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மை.
பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்பும் மூன்று விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
ஒன்று…
எப்போது கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமோ அப்போது கடுமையாகவும், எப்போது மென்மையாக நடந்துகொள்ள வேண்டுமோ அப்போது மென்மையாகவும், எப்போது நியூட்ரலாக நடந்துகொள்ள வேண்டுமோ அப்போது நியூட்ரலாகவும் நடந்துகொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
இரண்டாவது…
வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததே ஒரு முயற்சி. வெற்றி குறைந்த அளவு நஷ்டங்களினாலும், தோல்வி அதிக அளவு நஷ்டங்களாலும் உண்டாவது. இதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கான சூட்சுமம். இதையும் சொல்லி வளருங்கள்.
மூன்றாவது…
எந்த விஷயமானாலும் பிரச்சனையானாலும் முதலில் வீட்டில் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத்தான் அந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த அனுபவம் இருக்கும். நண்பர்களிடம் பகிர்வது தற்காலிகமான தீர்வினைத்தான் கொடுக்கும் என்பதையும் அவர்கள் மனதில் பதிய வையுங்கள்.
எல்லா நேரங்களிலும் பெண் குழந்தைகளுக்கு மாரல் சப்போர்ட் கொடுக்கத் தவறாதீர்கள். வாழ்த்துகள்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 11, 2019